• May 28 2026

போலி வாட்ஸ்அப் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்! வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Chithra / May 28th 2026, 8:46 am
image

சிசிடிவி (CCTV) கமெராக்கள் மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதிப்பது போன்று, போலியான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பி முன்னெடுக்கப்படும் மோசடி குறித்து பொலிஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 


இந்த செய்திகள் போலியான தொலைபேசி எண்களிலிருந்து அனுப்பப்படுவதுடன், அவை இலங்கை  பொலிஸாரால் அனுப்பப்பட்டது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்திகளைப் பெறுபவர்கள் ஒரு மோசடி இணையதளத்திற்கு வழிநடத்தப்பட்டு, அங்கு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதப் பணத்தை செலுத்துமாறு கோரப்படுகின்றனர்.


பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில், அதிகாரப்பூர்வ 'GovPay' கட்டண தளத்தை ஒத்ததாக இந்த போலி இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதன்போது, குறித்த இணையதளத்தை அணுகி பணத்தை செலுத்த முயற்சிப்பவர்களின் கடன் அட்டை (Credit Card) விபரங்கள் உள்ளிட்ட இரகசியத் தகவல்கள் மோசடிக்காரர்களால் திருடப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.


எனவே, எஸ்எம்எஸ் (SMS) அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செய்திகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

போலி வாட்ஸ்அப் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை சிசிடிவி (CCTV) கமெராக்கள் மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதிப்பது போன்று, போலியான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பி முன்னெடுக்கப்படும் மோசடி குறித்து பொலிஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செய்திகள் போலியான தொலைபேசி எண்களிலிருந்து அனுப்பப்படுவதுடன், அவை இலங்கை  பொலிஸாரால் அனுப்பப்பட்டது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்திகளைப் பெறுபவர்கள் ஒரு மோசடி இணையதளத்திற்கு வழிநடத்தப்பட்டு, அங்கு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதப் பணத்தை செலுத்துமாறு கோரப்படுகின்றனர்.பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில், அதிகாரப்பூர்வ 'GovPay' கட்டண தளத்தை ஒத்ததாக இந்த போலி இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன்போது, குறித்த இணையதளத்தை அணுகி பணத்தை செலுத்த முயற்சிப்பவர்களின் கடன் அட்டை (Credit Card) விபரங்கள் உள்ளிட்ட இரகசியத் தகவல்கள் மோசடிக்காரர்களால் திருடப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.எனவே, எஸ்எம்எஸ் (SMS) அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செய்திகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement