• May 26 2026

புத்தளத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

shanu / May 26th 2026, 4:38 pm
image

புத்தளம் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில்  அவசர உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று (25) நடைபெற்றது.


பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் ஆகியோரின்  தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் அமைச்சில் இடம்பெற்றது.


இந்த விசேட கலந்துரையாடலில் மக்கள் பிரதிநிதிகளுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகங்கள் உள்ளிட்ட உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


இம்மாதம் இடம்பெற்ற புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி, புத்தளம், முந்தல், மஹகும்புக்கடவல, வனாத்தவில்லுவ, தங்கொடுவ, வென்னப்புவ மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காணப்படும் இடையூறுகள்  குறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.


மக்களின் இந்த அத்தியாவசியத் தேவையை உணர்ந்த அமைச்சர், நிலவும் தடைகளை உடனடியாக அகற்றி திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக இந்த அவசர விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.


இக்கலந்துரையாடலின் போது, புத்தளம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், திட்டத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் தடைகளை நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் ஆகியோர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்குப் பதிலளித்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

நீர்ப்பாசனத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன ஒருமித்த உடன்பாட்டுக்கு வந்தன.


மேலும், இதற்கு தேவையான சுற்றுச்சூழல் அறிக்கைகளுக்கு இணங்க, நிலவும் பிரச்சினைகளுக்குத் தீவிரமாகத் தீர்வுகண்டு, மக்களுக்குத் தாமதமின்றி குடிநீரை வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் வரும் மூன்று மாதங்களுக்குள் அதற்குத் தேவையான அறிக்கைகளை தயாரிப்பதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

நீர்ப்பாசனத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர்.


இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ள அனர்த்தம் , அதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலும், இக்கலந்துரையாடலில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

புத்தளத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் புத்தளம் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில்  அவசர உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று (25) நடைபெற்றது.பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் ஆகியோரின்  தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் அமைச்சில் இடம்பெற்றது.இந்த விசேட கலந்துரையாடலில் மக்கள் பிரதிநிதிகளுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகங்கள் உள்ளிட்ட உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.இம்மாதம் இடம்பெற்ற புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி, புத்தளம், முந்தல், மஹகும்புக்கடவல, வனாத்தவில்லுவ, தங்கொடுவ, வென்னப்புவ மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காணப்படும் இடையூறுகள்  குறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.மக்களின் இந்த அத்தியாவசியத் தேவையை உணர்ந்த அமைச்சர், நிலவும் தடைகளை உடனடியாக அகற்றி திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக இந்த அவசர விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இக்கலந்துரையாடலின் போது, புத்தளம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், திட்டத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் தடைகளை நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் ஆகியோர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்குப் பதிலளித்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைநீர்ப்பாசனத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன ஒருமித்த உடன்பாட்டுக்கு வந்தன.மேலும், இதற்கு தேவையான சுற்றுச்சூழல் அறிக்கைகளுக்கு இணங்க, நிலவும் பிரச்சினைகளுக்குத் தீவிரமாகத் தீர்வுகண்டு, மக்களுக்குத் தாமதமின்றி குடிநீரை வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் வரும் மூன்று மாதங்களுக்குள் அதற்குத் தேவையான அறிக்கைகளை தயாரிப்பதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைநீர்ப்பாசனத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர்.இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ள அனர்த்தம் , அதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலும், இக்கலந்துரையாடலில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement