மன்னார் நகரில் இயங்கி வரும் பல கருவாடு விற்பனை நிலையங்களில் இன்று (09) விசேட சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளால் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் கருவாடு தொகையொன்று களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த கருவாடு தொகையை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும் தடை விதிக்கப்பட்டதுடன், அதற்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், குறித்த கருவாடு தொகை தொடர்பில் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மன்னார் நகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.
மன்னாரில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாடு கண்டுபிடிப்பு மன்னார் நகரில் இயங்கி வரும் பல கருவாடு விற்பனை நிலையங்களில் இன்று (09) விசேட சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மன்னார் நகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளால் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் கருவாடு தொகையொன்று களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, குறித்த கருவாடு தொகையை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும் தடை விதிக்கப்பட்டதுடன், அதற்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும், குறித்த கருவாடு தொகை தொடர்பில் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மன்னார் நகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.