• May 20 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை ஜப்பான் அரசு உதவி

dorin / Nov 30th 2025, 8:11 pm
image

இலங்கையை தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதநிலைக்கு பதிலளிக்கும் வகையில்,

ஜப்பான் அரசு இலங்கைக்கு அவசர உதவி வழங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

2025 நவம்பர் 29ஆம் திகதி இலங்கையில் சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய,

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை மூலம் 4 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு மதிப்பீட்டு குழுவை அனுப்ப ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. 

இந்த குழுவில் JICA அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இணைந்துள்ளனர்.

இந்தக் குழு, தரைப்பரப்பில் மருத்துவ தேவைகளை கண்காணிக்கும் என்பதுடன் JDR (Japan Disaster Relief) குழுவை அனுப்ப தேவையிருக்கிறதா என்பதனை ஆராயும். 

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களை JICA மூலம் இலங்கைக்குப் வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கையர்களுடன் கொண்டுள்ள நட்பு மற்றும் மனிதாபிமான நிலைப்பாட்டை முன்னிறுத்தி,

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் இந்த அவசர உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை ஜப்பான் அரசு உதவி இலங்கையை தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதநிலைக்கு பதிலளிக்கும் வகையில்,ஜப்பான் அரசு இலங்கைக்கு அவசர உதவி வழங்க முடிவு செய்துள்ளது.இது தொடர்பில் ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,2025 நவம்பர் 29ஆம் திகதி இலங்கையில் சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய,ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை மூலம் 4 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு மதிப்பீட்டு குழுவை அனுப்ப ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. இந்த குழுவில் JICA அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இணைந்துள்ளனர்.இந்தக் குழு, தரைப்பரப்பில் மருத்துவ தேவைகளை கண்காணிக்கும் என்பதுடன் JDR (Japan Disaster Relief) குழுவை அனுப்ப தேவையிருக்கிறதா என்பதனை ஆராயும். சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களை JICA மூலம் இலங்கைக்குப் வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.இலங்கையர்களுடன் கொண்டுள்ள நட்பு மற்றும் மனிதாபிமான நிலைப்பாட்டை முன்னிறுத்தி,சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் இந்த அவசர உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement