நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலமும் சிரமதானப் பணியும் இன்று (07) கிண்ணியா பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டன.
கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஒழுங்கமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சூழலைச் சுத்தப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விழிப்புணர்வுப் பேரணி கிண்ணியா சந்தி பள்ளிவாசலில் ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாக சென்று திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியை அடைந்தது.
பேரணியில் கலந்துகொண்டோர் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினர்.
மேலும், இன்றைய தினம் மாஞ்சோலை கிராம சேவையாளர் பிரிவு மற்றும் கட்டையாறு கிராம சேவையாளர் பிரிவுகள் டெங்கு பரிசோதனை நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி, நகர சபை செயலாளர் எம். கே. எம். அனீஸ், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். எம். அஜித், பொறுப்பதிகாரி சமிந்த பண்டார உட்பட நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இப்பணியினை முன்னெடுத்தனர்.
கிண்ணியாவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் சிரமதானப் பணியும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலமும் சிரமதானப் பணியும் இன்று (07) கிண்ணியா பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டன.கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஒழுங்கமைத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சூழலைச் சுத்தப்படுத்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த விழிப்புணர்வுப் பேரணி கிண்ணியா சந்தி பள்ளிவாசலில் ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாக சென்று திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியை அடைந்தது. பேரணியில் கலந்துகொண்டோர் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினர்.மேலும், இன்றைய தினம் மாஞ்சோலை கிராம சேவையாளர் பிரிவு மற்றும் கட்டையாறு கிராம சேவையாளர் பிரிவுகள் டெங்கு பரிசோதனை நிகழ்வுகள் நடைபெறுகின்றன.இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி, நகர சபை செயலாளர் எம். கே. எம். அனீஸ், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். எம். அஜித், பொறுப்பதிகாரி சமிந்த பண்டார உட்பட நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இப்பணியினை முன்னெடுத்தனர்.