• Sep 07 2026

டெங்கு மரணங்கள் 73 ஆக உயர்வு: 96,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Chithra / Sep 6th 2026, 4:30 pm
image


இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன், நாடு முழுவதும் இதுவரை 96,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.


செப்டெம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மட்டும் 737 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


மாகாண ரீதியில், மேல் மாகாணமே அதிகளவான டெங்கு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.84 சதவீதம், அதாவது 50,851 நோயாளர்கள், மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.


அதேவேளை, தென் மாகாணத்தில் 13,950 பேரும், மத்திய மாகாணத்தில் 8,818 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,925 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெங்கு மரணங்கள் 73 ஆக உயர்வு: 96,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், நாடு முழுவதும் இதுவரை 96,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.செப்டெம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மட்டும் 737 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.மாகாண ரீதியில், மேல் மாகாணமே அதிகளவான டெங்கு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.84 சதவீதம், அதாவது 50,851 நோயாளர்கள், மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.அதேவேளை, தென் மாகாணத்தில் 13,950 பேரும், மத்திய மாகாணத்தில் 8,818 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,925 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement