• Aug 20 2026

யாழ்ப்பாணத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை: 9 வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம்

Chithra / Aug 19th 2026, 10:48 am
image


டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து காணப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 9 வீட்டு உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கடந்த 03, 06 மற்றும் 08 ஆம் திகதிகளில் வளாக வீதி, கலாசாலை வீதி மற்றும் பனிக்கர் வீதி ஆகிய பகுதிகளில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் பா. சஞ்சீவன் தலைமையில் சோதனை முன்னெடுக்கப்பட்டன.


இதன்போது வீடுகளின் பல்வேறு இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட 9 வீட்டு உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.


அவர்களுக்கு எதிராக நேற்று (18) யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.


வழக்குகளை விசாரணை செய்த நீதவான், நீதிமன்றில் முன்னிலையான 8 பேருக்கும் தலா 10,000 ரூபா வீதம் மொத்தமாக 80,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


அத்துடன், நீதிமன்றில் முன்னிலையாகாத மற்றுமொரு நபருக்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை: 9 வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து காணப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 9 வீட்டு உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த 03, 06 மற்றும் 08 ஆம் திகதிகளில் வளாக வீதி, கலாசாலை வீதி மற்றும் பனிக்கர் வீதி ஆகிய பகுதிகளில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் பா. சஞ்சீவன் தலைமையில் சோதனை முன்னெடுக்கப்பட்டன.இதன்போது வீடுகளின் பல்வேறு இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட 9 வீட்டு உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.அவர்களுக்கு எதிராக நேற்று (18) யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்குகளை விசாரணை செய்த நீதவான், நீதிமன்றில் முன்னிலையான 8 பேருக்கும் தலா 10,000 ரூபா வீதம் மொத்தமாக 80,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டார்.அத்துடன், நீதிமன்றில் முன்னிலையாகாத மற்றுமொரு நபருக்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement