மழை காலத்தில் கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நுளம்புகள் வேகமாக பெருகும் அபாயம் உள்ளதாகவும், நோயாளி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மழையுடனான காலப்பகுதிகளில் டெங்குவின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமாகும்.
இதனால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
குறிப்பாக, வீடுகள், சுற்றுச்சூழலில் பொலிதீன், சிரட்டை, யோக்கட் கப், டயர்கள், போத்தல்கள் போன்ற கழிவுகளை அகற்றி, நீர் தேங்கும் இடங்களை சுத்தம் செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
வீடுகள் மட்டுமன்றி, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் பெருகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எனவே, அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகள் தமது வளாகங்கள் நுளம்புகள் அற்ற பாதுகாப்பான இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய ரீதியாக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில், கல்முனை பிராந்தியத்திலும் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிராந்திய பணிமனையின் கீழ் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே பிராந்தியத்திலுள்ள மக்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிராந்திய பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
மழையுடனான காலநிலையில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம். கல்முனை மக்களுக்கு எச்சரிக்கை மழை காலத்தில் கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நுளம்புகள் வேகமாக பெருகும் அபாயம் உள்ளதாகவும், நோயாளி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மழையுடனான காலப்பகுதிகளில் டெங்குவின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமாகும். இதனால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.குறிப்பாக, வீடுகள், சுற்றுச்சூழலில் பொலிதீன், சிரட்டை, யோக்கட் கப், டயர்கள், போத்தல்கள் போன்ற கழிவுகளை அகற்றி, நீர் தேங்கும் இடங்களை சுத்தம் செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்வீடுகள் மட்டுமன்றி, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் பெருகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகள் தமது வளாகங்கள் நுளம்புகள் அற்ற பாதுகாப்பான இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.மேலும், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய ரீதியாக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், கல்முனை பிராந்தியத்திலும் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பிராந்திய பணிமனையின் கீழ் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே பிராந்தியத்திலுள்ள மக்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிராந்திய பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.