• May 22 2026

நகைக்காக நடந்த கொடூரம்! வீட்டு வேலைக்கு வந்தவரின் அதிர்ச்சிச் செயல்

Chithra / May 21st 2026, 7:29 pm
image

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் பயணப்பொதி ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இச் சம்பவம் தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.


படுகொலை செய்யப்பட்டவர் சீதுவை முக்கலங்கமுவ, பியசமர பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய மூதாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


நேற்று (20) சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 


அப்போது, வீட்டின் அறையொன்றில் இருந்த பயணப்பொதிக்குள் மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, வீட்டின் பராமரிப்பு பணிக்காக வந்திருந்த 42 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் போதைப்பொருளுக்கு பலத்த அடிமையானவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மூதாட்டியிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்திலேயே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பின்னர் சடலம் பயணப்பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.


சம்பவ இடத்திற்கு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா மற்றும் அரச சட்ட வைத்திய அதிகாரி வருகை தந்து ஆரம்பகட்ட மற்றும் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டனர்.


இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

நகைக்காக நடந்த கொடூரம் வீட்டு வேலைக்கு வந்தவரின் அதிர்ச்சிச் செயல் சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் பயணப்பொதி ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இச் சம்பவம் தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.படுகொலை செய்யப்பட்டவர் சீதுவை முக்கலங்கமுவ, பியசமர பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய மூதாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நேற்று (20) சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டின் அறையொன்றில் இருந்த பயணப்பொதிக்குள் மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, வீட்டின் பராமரிப்பு பணிக்காக வந்திருந்த 42 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் போதைப்பொருளுக்கு பலத்த அடிமையானவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மூதாட்டியிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்திலேயே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பின்னர் சடலம் பயணப்பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.சம்பவ இடத்திற்கு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா மற்றும் அரச சட்ட வைத்திய அதிகாரி வருகை தந்து ஆரம்பகட்ட மற்றும் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டனர்.இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement