• May 29 2026

மத ஆடையின் பின்னால் மறையும் குற்றங்கள்..! நீதி கோரி தொடரும் போராட்டம்

Chithra / May 29th 2026, 2:53 pm
image

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால்  நடைபெறும்  பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக  கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில்  மன்னார் மற்றும் கிளிநொச்சியில் இன்று  வெள்ளிக்கிழமை போராட்டங்கள் இடம்பெற்றன. 


மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) காலை  மன்னார்   மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  இடம் பெற்றது.


மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் கே.மகாலட்சுமி தலைமையில் இடம்பெற்ற குறித்த கண்டனப் பேரணியில்,பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சமூக செயல்பாட்டாளர்கள் கலந்துகொண்டதோடு, புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் யுகைதியா முகைதீனும் கலந்துகொண்டிருந்தார்.


சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பக்கசார்பற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், சட்டமும், நீதி முறையும் சமமாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.


மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆரம்பமான ஊர்வலம், மன்னார் பஜார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்டச் செயலக பகுதியை வந்தடைந்தது.


இதன்போது அவர்கள் பகிரங்க கோரிக்கையை முன்வைத்து அதிகாரிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜரை பொது வெளியில் வாசித்தனர்.


https://wetransfer.com/downloads/c28af3551032ab7d43709d009f80a31920260529054427/ae4efded20366dcca8f56858fdb9cfe620260529055359/d025b1



இதேவேளை 

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 


அத்தோடு இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள், சிறுமியின் கண்ணீர் மௌனமாகாது, மத ஆடையின் பின்னால் மறையும் குற்றங்களுக்கு நீதி வேண்டும், குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை வேண்டும், சிறார்களைக் காப்போம், குற்றங்களை நிறுத்துவோம், சிறார்களின் பாதுகாப்பு எங்கள் உரிமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு அமைதிவழியில் கவனயீர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.


குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.


மத ஆடையின் பின்னால் மறையும் குற்றங்கள். நீதி கோரி தொடரும் போராட்டம் நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால்  நடைபெறும்  பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக  கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில்  மன்னார் மற்றும் கிளிநொச்சியில் இன்று  வெள்ளிக்கிழமை போராட்டங்கள் இடம்பெற்றன. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) காலை  மன்னார்   மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  இடம் பெற்றது.மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் கே.மகாலட்சுமி தலைமையில் இடம்பெற்ற குறித்த கண்டனப் பேரணியில்,பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சமூக செயல்பாட்டாளர்கள் கலந்துகொண்டதோடு, புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் யுகைதியா முகைதீனும் கலந்துகொண்டிருந்தார்.சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பக்கசார்பற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், சட்டமும், நீதி முறையும் சமமாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆரம்பமான ஊர்வலம், மன்னார் பஜார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்டச் செயலக பகுதியை வந்தடைந்தது.இதன்போது அவர்கள் பகிரங்க கோரிக்கையை முன்வைத்து அதிகாரிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜரை பொது வெளியில் வாசித்தனர்.https://wetransfer.com/downloads/c28af3551032ab7d43709d009f80a31920260529054427/ae4efded20366dcca8f56858fdb9cfe620260529055359/d025b1இதேவேளை அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள், சிறுமியின் கண்ணீர் மௌனமாகாது, மத ஆடையின் பின்னால் மறையும் குற்றங்களுக்கு நீதி வேண்டும், குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை வேண்டும், சிறார்களைக் காப்போம், குற்றங்களை நிறுத்துவோம், சிறார்களின் பாதுகாப்பு எங்கள் உரிமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு அமைதிவழியில் கவனயீர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement