நாட்டில் தற்போது காணப்படும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை தேவைக்கு மிக அதிக மட்டத்தில் காணப்படுவதால், சிலவற்றை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்வதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், போயவலான பொலிஸ் நிலையம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த நிலையங்களுக்கு பதிலாக புதிய இடங்களை தேடுவதை விட, தற்போதைய சூழலில் தேவையற்ற ரீதியில் இயங்கி கொண்டிருக்கும் சில பொலிஸ் நிலையங்களை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
தேவையற்ற நிலையில் இயங்கும் நிலையங்களை மூடுவதன் மூலம் நிர்வாகச் செலவுகளைக் குறைத்து வளங்களை மிகவும் தேவையான இடங்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் பொலிஸ் சேவையை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கான மீளாய்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் அமையவுள்ளது என்றார்.
பொலிஸ் நிலையங்கள் சிலவற்றை மூடுவது குறித்து பரிசீலனை - பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு நாட்டில் தற்போது காணப்படும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை தேவைக்கு மிக அதிக மட்டத்தில் காணப்படுவதால், சிலவற்றை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்வதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.குருநாகல் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,நாட்டில் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், போயவலான பொலிஸ் நிலையம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த நிலையங்களுக்கு பதிலாக புதிய இடங்களை தேடுவதை விட, தற்போதைய சூழலில் தேவையற்ற ரீதியில் இயங்கி கொண்டிருக்கும் சில பொலிஸ் நிலையங்களை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.தேவையற்ற நிலையில் இயங்கும் நிலையங்களை மூடுவதன் மூலம் நிர்வாகச் செலவுகளைக் குறைத்து வளங்களை மிகவும் தேவையான இடங்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் பொலிஸ் சேவையை மிகவும் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கான மீளாய்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் அமையவுள்ளது என்றார்.