பதுளை - மஹியங்கனை நகரில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டுவந்து போடப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் கிடைத்த தகவலுக்கமைய மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய குறித்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மரணம் தொடர்பாக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, கம்பஹா - கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபனஹ பகுதியில் உள்ள வீடொன்றினுள் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கட்டானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அக்கரபனஹ பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிபப் பெண் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (25) நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.
அத்துடன், கம்பஹா - பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துட்டகைமுணு மாவத்தையில் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் விஹாரகம - திவுலன்கடவல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவருக்கும் மேலும் ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலங்கள்; தொடரும் மர்மம் தீவிர விசாரணை பதுளை - மஹியங்கனை நகரில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டுவந்து போடப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் கிடைத்த தகவலுக்கமைய மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய குறித்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மரணம் தொடர்பாக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, கம்பஹா - கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபனஹ பகுதியில் உள்ள வீடொன்றினுள் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கட்டானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அக்கரபனஹ பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிபப் பெண் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (25) நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது. அத்துடன், கம்பஹா - பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துட்டகைமுணு மாவத்தையில் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் விஹாரகம - திவுலன்கடவல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.உயிரிழந்தவருக்கும் மேலும் ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.