கந்தளாய் பேரமடு குளம் நீரின்றி முற்றாக வற்றியுள்ளதால், இக்குளத்தை நம்பி வாழ்ந்து வரும் 40க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குளத்தில் போதியளவு நீர் இல்லாத காரணத்தால் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தினசரி வருமானத்தை நம்பி வாழும் மீனவ குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பேரமடு குளத்தை நம்பி 900 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது குளம் தொடர்ந்து வற்றிய நிலையில் காணப்படுவதால், எதிர்வரும் விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
குளத்தில் நீர் மட்டம் குறைந்து வருவதால் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் என இரு தரப்பினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முற்றாக வற்றிய பேரமடு குளம் – 40க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார நெருக்கடி கந்தளாய் பேரமடு குளம் நீரின்றி முற்றாக வற்றியுள்ளதால், இக்குளத்தை நம்பி வாழ்ந்து வரும் 40க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குளத்தில் போதியளவு நீர் இல்லாத காரணத்தால் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தினசரி வருமானத்தை நம்பி வாழும் மீனவ குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, பேரமடு குளத்தை நம்பி 900 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது குளம் தொடர்ந்து வற்றிய நிலையில் காணப்படுவதால், எதிர்வரும் விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.குளத்தில் நீர் மட்டம் குறைந்து வருவதால் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் என இரு தரப்பினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.