• Jul 24 2026

முல்லைநகரை அண்டிய பகுதியில் முழுமைப்படுத்தப்படாதுள்ள பொழுதுபோக்கு பூங்காவை முழுமைப்படுத்துக; - ரவிகரன் எம்.பி!

shanu / Jul 23rd 2026, 4:39 pm
image

முல்லைத்தீவின் நகரை அண்மித்தபகுதியில்  அங்கயற்கண்ணி அன்னக்குடிலுக்கு அருகில் கடந்த பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டு, இதுவரை முழுமைப்படுத்தப்படாமலுள்ள பொழுதுபோக்கு பூங்காவை முழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுற்றுலா பிரதி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.


இந்நிலையில் குறித்த பொழுதுபோக்கு பூங்காவை முழுமைப்படுத்துவது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க பதிலளித்துள்ளார்.


நாடாளுமன்றில் 23.07.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்திலேயே இவ்விடயம்தொடர்பில் பேசப்பட்டுள்ளது.



இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


தொடக்கம் பெற்று இன்னமும் முடிவடையாத நிலையிலுள்ள சுற்றுலா சார் கட்டுமானங்களை உடன் நிறைவுக்கு கொண்டுவருதற்கான ஏற்பாடுகளை முன்னுரிமை அடிப்படையில், தங்கள் அமைச்சு மேற்கொள்ளவேண்டும்.


குறிப்பாக, முல்லைத்தீவின் நகர்ப்பகுதியில் உள்ள அங்கயற்கண்ணி அன்னக்குடிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவிற்குரிய வேலைத்திட்டம் மிக நீண்டகாலமாக முடிவுறுத்தப்படாது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.


குறித்த வேலைத்திட்டத்தை நிறைவுறுத்துவதற்கு 32மில்லியன் நிதி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறாக ஒரு செயற்றிட்டத்தை தொடங்கி அதனை அடுத்தடுத்த ஆண்டுகளில் முடிவுறுத்தாது விடுவது ஏன்? மேற்படியாக, பகுதியளவில் உள்ள வேலைத்திட்டங்களை நிறைவுறுத்த தங்கள் அமைச்சு விசேட தலையீட்டை இயல்தகு விரைவில் மேற்கொள்ளுமா எனக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.


இந்நிலையில் சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க இதன்போது பதிலளிக்கையில்,


நாம் இந்த சுற்றுலாக் கருத்திட்டங்களுக்கான முன்மொழிவுகைளை பிரதேசசெயலகங்களிலிருந்து கோரியிருக்கின்றோம்


பின்னர் தேசிய திட்டமிடல் அமைச்சிடமிருந்து அதற்கான அங்கீகாரங்களைப் பெறுவோம்.


இதனைத் தவிர வடக்கு மாகாணசபையும் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கான பல்வேறு கருத்திட்டங்களைச் செயற்படுத்திவருகின்றது.


தாங்கள் கூறிய விடயம் தொடர்பில் என்னால் கவனஞ்செலுத்தப்படும். தாங்கள் குறிப்பிட்ட அந்த கருத்திட்டம் வடக்குமாகாணசபையினால் பணம் செலுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதா, அந்த செயற்றிட்டத்தில் என்ன நடந்துள்ளது என்பதுதொடர்பில் எம்மால் ஆராயப்படும்.


இவ்வாறு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள அந்தச் செயற்றிட்டத்தினை முழுமைப்படுத்துவது தொடர்பில் எம்மால் கவனஞ்செலுத்தப்படும் - என்றார்.

முல்லைநகரை அண்டிய பகுதியில் முழுமைப்படுத்தப்படாதுள்ள பொழுதுபோக்கு பூங்காவை முழுமைப்படுத்துக; - ரவிகரன் எம்.பி முல்லைத்தீவின் நகரை அண்மித்தபகுதியில்  அங்கயற்கண்ணி அன்னக்குடிலுக்கு அருகில் கடந்த பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டு, இதுவரை முழுமைப்படுத்தப்படாமலுள்ள பொழுதுபோக்கு பூங்காவை முழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுற்றுலா பிரதி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.இந்நிலையில் குறித்த பொழுதுபோக்கு பூங்காவை முழுமைப்படுத்துவது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க பதிலளித்துள்ளார்.நாடாளுமன்றில் 23.07.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்திலேயே இவ்விடயம்தொடர்பில் பேசப்பட்டுள்ளது.இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,தொடக்கம் பெற்று இன்னமும் முடிவடையாத நிலையிலுள்ள சுற்றுலா சார் கட்டுமானங்களை உடன் நிறைவுக்கு கொண்டுவருதற்கான ஏற்பாடுகளை முன்னுரிமை அடிப்படையில், தங்கள் அமைச்சு மேற்கொள்ளவேண்டும்.குறிப்பாக, முல்லைத்தீவின் நகர்ப்பகுதியில் உள்ள அங்கயற்கண்ணி அன்னக்குடிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவிற்குரிய வேலைத்திட்டம் மிக நீண்டகாலமாக முடிவுறுத்தப்படாது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.குறித்த வேலைத்திட்டத்தை நிறைவுறுத்துவதற்கு 32மில்லியன் நிதி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறாக ஒரு செயற்றிட்டத்தை தொடங்கி அதனை அடுத்தடுத்த ஆண்டுகளில் முடிவுறுத்தாது விடுவது ஏன் மேற்படியாக, பகுதியளவில் உள்ள வேலைத்திட்டங்களை நிறைவுறுத்த தங்கள் அமைச்சு விசேட தலையீட்டை இயல்தகு விரைவில் மேற்கொள்ளுமா எனக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.இந்நிலையில் சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க இதன்போது பதிலளிக்கையில்,நாம் இந்த சுற்றுலாக் கருத்திட்டங்களுக்கான முன்மொழிவுகைளை பிரதேசசெயலகங்களிலிருந்து கோரியிருக்கின்றோம்பின்னர் தேசிய திட்டமிடல் அமைச்சிடமிருந்து அதற்கான அங்கீகாரங்களைப் பெறுவோம்.இதனைத் தவிர வடக்கு மாகாணசபையும் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கான பல்வேறு கருத்திட்டங்களைச் செயற்படுத்திவருகின்றது.தாங்கள் கூறிய விடயம் தொடர்பில் என்னால் கவனஞ்செலுத்தப்படும். தாங்கள் குறிப்பிட்ட அந்த கருத்திட்டம் வடக்குமாகாணசபையினால் பணம் செலுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதா, அந்த செயற்றிட்டத்தில் என்ன நடந்துள்ளது என்பதுதொடர்பில் எம்மால் ஆராயப்படும்.இவ்வாறு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள அந்தச் செயற்றிட்டத்தினை முழுமைப்படுத்துவது தொடர்பில் எம்மால் கவனஞ்செலுத்தப்படும் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement