யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு அம்மன் பகுதியிலும் பிரதேச இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வாழ்ங்கல் நிகழ்வும் நடாத்தப்பட்டுள்ளது.
அம்பன் கொட்டோடை சந்தியில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை குடத்தனை வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் ஆசிரியர் பொது ஈகை சுடரை ஏற்றி வைத்தார்.
ஈகைச் சுடர்கள் பருத்தித் துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்தராஜா சுரேஷ்குமார் ஏற்றிவைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் உறவுகளான த. இன்பராசா, ம.ஜெயந்திமலர், திரு மயில்வாகனம் உட்பட அனைவரும் ஏற்றி வைத்தனர்.
அதனை தொடர்ந்து மலர் வணக்கத்தினை பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆரம்பித்துவைக்க அனைவரும் மலர் அஞ்சலியை செலுத்தியத்தை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவாக உப்பு கஞ்சி வழங்கலை ஊடகவியலாளர் ரெஜி வழங்கி வைத்தார்.
இதில் பருத்தித்துறை பிரதேச சபை குடத்தனை வட்டார உறுப்பினர் அகஸ்டின் ஆசிரியர், முன்னாள் உறுப்பினர் ஆனந்தராசா சுரேஷ்குமார், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயனந்தம் ஜெயகோபி, மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்
அம்பனிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சிவழங்கலும் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு அம்மன் பகுதியிலும் பிரதேச இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வாழ்ங்கல் நிகழ்வும் நடாத்தப்பட்டுள்ளது.அம்பன் கொட்டோடை சந்தியில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை குடத்தனை வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் ஆசிரியர் பொது ஈகை சுடரை ஏற்றி வைத்தார். ஈகைச் சுடர்கள் பருத்தித் துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்தராஜா சுரேஷ்குமார் ஏற்றிவைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் உறவுகளான த. இன்பராசா, ம.ஜெயந்திமலர், திரு மயில்வாகனம் உட்பட அனைவரும் ஏற்றி வைத்தனர்.அதனை தொடர்ந்து மலர் வணக்கத்தினை பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆரம்பித்துவைக்க அனைவரும் மலர் அஞ்சலியை செலுத்தியத்தை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவாக உப்பு கஞ்சி வழங்கலை ஊடகவியலாளர் ரெஜி வழங்கி வைத்தார். இதில் பருத்தித்துறை பிரதேச சபை குடத்தனை வட்டார உறுப்பினர் அகஸ்டின் ஆசிரியர், முன்னாள் உறுப்பினர் ஆனந்தராசா சுரேஷ்குமார், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயனந்தம் ஜெயகோபி, மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்