• Jun 03 2026

கோயம்பேடு கேளிக்கை விடுதி தகராறு; யான்சியைத் தொடர்ந்து சிறுமியும் உயிரிழப்பு

Chithra / Jun 3rd 2026, 8:41 am
image

சென்னை - கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது திட்டமிட்டு காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


முன்னதாக இந்த கொடூர சம்பவத்தில் 'யான்சி' என்ற 18 வயது இலங்கை அகதி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (18) என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். தனது தோழியை நேரில் சந்திப்பதற்காக யான்சி சென்னைக்கு வந்துள்ளார்.


சம்பவத்தன்று இரவு, அவர்கள் கோயம்பேட்டில் உள்ள ஒரு பிரபல கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்த மற்றொரு தரப்பினருடன் யான்சி தரப்புக்கு திடீரென கடும் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டுள்ளது. 


நிலைமை எல்லை மீறியதைத் தொடர்ந்து, விடுதியின் பாதுகாவலர்கள் இருதரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.


விடுதியை விட்டு வெளியேறிய பிறகும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், யான்சி, அவரது தோழி  மற்றும் இருவர் சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றுள்ளது. 


கோயம்பேடு பகுதியில் வைத்து, மோட்டார் சைக்கிள் மீது அந்த கும்பல் தங்களது காரை மிக வேகமாக ஏற்றி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.


காரின் வேகம் மற்றும் மோதிய வீரியத்தில் பலத்த காயமடைந்த யான்சி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த விபத்தில் அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய மற்றொரு சிறுமியும் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


அபாய கட்டத்தில், சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமியும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.


இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விபத்தை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சி ஒன்றின் கொடி கட்டப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர்.


இந்த கொலை தொடர்பாக பாலகுரு அவரது நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 


மேலும், மோதல் வெடித்த கோயம்பேடு கேளிக்கை விடுதிக்கு அதிகாரிகள் தற்போது முத்திரையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். 


இந்த இரட்டைக்கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்பேடு கேளிக்கை விடுதி தகராறு; யான்சியைத் தொடர்ந்து சிறுமியும் உயிரிழப்பு சென்னை - கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது திட்டமிட்டு காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.முன்னதாக இந்த கொடூர சம்பவத்தில் 'யான்சி' என்ற 18 வயது இலங்கை அகதி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (18) என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். தனது தோழியை நேரில் சந்திப்பதற்காக யான்சி சென்னைக்கு வந்துள்ளார்.சம்பவத்தன்று இரவு, அவர்கள் கோயம்பேட்டில் உள்ள ஒரு பிரபல கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இருந்த மற்றொரு தரப்பினருடன் யான்சி தரப்புக்கு திடீரென கடும் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டுள்ளது. நிலைமை எல்லை மீறியதைத் தொடர்ந்து, விடுதியின் பாதுகாவலர்கள் இருதரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.விடுதியை விட்டு வெளியேறிய பிறகும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், யான்சி, அவரது தோழி  மற்றும் இருவர் சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றுள்ளது. கோயம்பேடு பகுதியில் வைத்து, மோட்டார் சைக்கிள் மீது அந்த கும்பல் தங்களது காரை மிக வேகமாக ஏற்றி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.காரின் வேகம் மற்றும் மோதிய வீரியத்தில் பலத்த காயமடைந்த யான்சி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்தில் அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய மற்றொரு சிறுமியும் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அபாய கட்டத்தில், சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமியும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விபத்தை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சி ஒன்றின் கொடி கட்டப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர்.இந்த கொலை தொடர்பாக பாலகுரு அவரது நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், மோதல் வெடித்த கோயம்பேடு கேளிக்கை விடுதிக்கு அதிகாரிகள் தற்போது முத்திரையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement