• May 17 2026

சுன்னாகம்–புத்தூர் வீதி இன்று முதல் மூடல்..! வெளியான அறிவிப்பு

Aathira / May 16th 2026, 8:53 am
image

யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்று (16) மற்றும் நாளை (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவை அவசரமாக மறுசீரமைக்கப்பட வேண்டிய காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த ரயில்வே கடவை இன்று காலை 7.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம்–புத்தூர் வீதி இன்று முதல் மூடல். வெளியான அறிவிப்பு யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்று (16) மற்றும் நாளை (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ தெரிவித்துள்ளார்.சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவை அவசரமாக மறுசீரமைக்கப்பட வேண்டிய காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய, குறித்த ரயில்வே கடவை இன்று காலை 7.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement