• Apr 24 2026

புத்தளத்தில் சித்திரைச் செவ்வாய் முளைப் பதித்தல் நிகழ்வு !

Ziya / Apr 24th 2026, 3:40 pm
image

புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்களினால் பாரம்பரிய நிகழ்வாகக்கொண்டாடப்படும் ‘சித்திரைச்  செவ்வாய் முளைப் பதித்தல்நிகழ்வு (19)ஞாயிறு ஆலயங்களில் ஆரம்பமானது.


இதில்இரண்டாம் செவ்வாய்க்கொட்டு நிகழ்வானது நேற்று 23 மாலை இடம்பெற்றது.


முளைப்பதித்தலானது,பத்து நாட்கள் கன்னிப்பெண்களினால் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாகவளர்க்கப்படும்.


பத்தாவது நாள் செழிப்பாக வளர்ந்த இந்த நவதாணியமானது ,இறுதி நாள் முளைக்கொட்டும் நிகழ்வானது(29)திகதி புதன்கிழமையன்று மிகவும் சிறப்பாக நடைபெறஉள்ளது.


சித்திரை மாதத்தில் கடும் வெப்பமான காலம் என்பதால்,இந்நாளில் அம்மை நோய் கூடுதலாக ஏற்படும்காலமாகும்.


இந்த நோயிலிருந்து மக்களைக்காப்பாற்றவும்,மழையை வேண்டியும் தொன்று தொட்டு இந்த விழாஉடப்பில் நடைபெற்று வந்ததாக வரலாற்று ரீதியாக சொல்லப்பட்டுவந்தது ஐதிகமாகும்.


இறுதி நாளில் பெண்கள் ஒரே வர்ண சாரிகள்அணிந்து வரிசைக்கிரமமாக அங்கு வைக்கப்பட்ட கும்பத்தை வலம்வந்து இந்த சித்திரைச் செவ்வாய் நிகழ்வைகொண்டாடுவார்கள்.


இதில் உடப்பின் பல இடங்களிலிலிமிருந்தும் கும்பத்தை சுமந்து வந்து,இறுதியில் உடப்பு வீரபத்திரகாளியம்மன்ஆலய கடற்கரை வெளியில் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துசெவ்வாய்க்கொட்டி அருகில் சமுத்திரத்தில் கும்பத்தைச்சொரிவார்கள்.

புத்தளத்தில் சித்திரைச் செவ்வாய் முளைப் பதித்தல் நிகழ்வு புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்களினால் பாரம்பரிய நிகழ்வாகக்கொண்டாடப்படும் ‘சித்திரைச்  செவ்வாய் முளைப் பதித்தல்நிகழ்வு (19)ஞாயிறு ஆலயங்களில் ஆரம்பமானது.இதில்இரண்டாம் செவ்வாய்க்கொட்டு நிகழ்வானது நேற்று 23 மாலை இடம்பெற்றது.முளைப்பதித்தலானது,பத்து நாட்கள் கன்னிப்பெண்களினால் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாகவளர்க்கப்படும்.பத்தாவது நாள் செழிப்பாக வளர்ந்த இந்த நவதாணியமானது ,இறுதி நாள் முளைக்கொட்டும் நிகழ்வானது(29)திகதி புதன்கிழமையன்று மிகவும் சிறப்பாக நடைபெறஉள்ளது.சித்திரை மாதத்தில் கடும் வெப்பமான காலம் என்பதால்,இந்நாளில் அம்மை நோய் கூடுதலாக ஏற்படும்காலமாகும்.இந்த நோயிலிருந்து மக்களைக்காப்பாற்றவும்,மழையை வேண்டியும் தொன்று தொட்டு இந்த விழாஉடப்பில் நடைபெற்று வந்ததாக வரலாற்று ரீதியாக சொல்லப்பட்டுவந்தது ஐதிகமாகும்.இறுதி நாளில் பெண்கள் ஒரே வர்ண சாரிகள்அணிந்து வரிசைக்கிரமமாக அங்கு வைக்கப்பட்ட கும்பத்தை வலம்வந்து இந்த சித்திரைச் செவ்வாய் நிகழ்வைகொண்டாடுவார்கள்.இதில் உடப்பின் பல இடங்களிலிலிமிருந்தும் கும்பத்தை சுமந்து வந்து,இறுதியில் உடப்பு வீரபத்திரகாளியம்மன்ஆலய கடற்கரை வெளியில் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துசெவ்வாய்க்கொட்டி அருகில் சமுத்திரத்தில் கும்பத்தைச்சொரிவார்கள்.

Advertisement

Advertisement

Advertisement