• May 20 2026

தாண்டவமாடிய புயல் ஆபத்திலிருந்த குழந்தைகள்;ஹெலிகொப்டரில் மீட்கும் பரபரப்புக் காட்சி!

shanu / Nov 30th 2025, 12:55 pm
image

நாட்டைப் புரட்டிப் போட்ட டிட்வா புயலால் சிலாபம் மருத்துவமனையில்  ஆபத்திலிருந்த குழந்தைகள் விமானப்படையால் இன்று காலை மீட்கப்பட்டனர்.


தாண்டவமாடிய புயலால் நாடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் சிலாபம் மருத்துவமனையும் பாதிப்புக்குள்ளானது. 


இந்த நிலையில் சிலாபம் மருத்துவமனையில் பிறந்து சில மாதங்களேயான குழந்தைகள் மற்றும் 10 வயது குழந்தையும் ஆபத்திலிருந்தனர். 


அவர்களை மீட்க விமானப்படை அதிகாரிகள் ஹெலிகொப்டரில் சிலாபம் மருத்துவமனைக்குச் சென்றனர். 


புயலின் கோர தாண்டவத்தால் சிலாபத்தில் மின்தடை ஏற்பட்டது. மின்தடை மற்றும் வெள்ளத்திற்கு மத்தியில் ஆபத்திலிருந்த குழந்தைகளை ஹெலிகொப்டரில்  மீட்டனர். 


ரத்மலானாவில் இருந்து பெல்-412 ஹெலிகாப்டர் மூலம் குழந்தைகளை மீட்டு கட்டுநாயக்கவிற்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவர்கள் அவசர சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 


நாட்டில் கோரதாண்டவமாடிய புயலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இவ்வாறு வெள்ளம் , மண்சரிவு என்பவற்றில் சிக்கிப் போராடிக் கொண்டிருப்பவர்களை விமானப்படை, கடற்படை, இராணுவப்படை விமானங்களில் மீட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாண்டவமாடிய புயல் ஆபத்திலிருந்த குழந்தைகள்;ஹெலிகொப்டரில் மீட்கும் பரபரப்புக் காட்சி நாட்டைப் புரட்டிப் போட்ட டிட்வா புயலால் சிலாபம் மருத்துவமனையில்  ஆபத்திலிருந்த குழந்தைகள் விமானப்படையால் இன்று காலை மீட்கப்பட்டனர்.தாண்டவமாடிய புயலால் நாடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் சிலாபம் மருத்துவமனையும் பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையில் சிலாபம் மருத்துவமனையில் பிறந்து சில மாதங்களேயான குழந்தைகள் மற்றும் 10 வயது குழந்தையும் ஆபத்திலிருந்தனர். அவர்களை மீட்க விமானப்படை அதிகாரிகள் ஹெலிகொப்டரில் சிலாபம் மருத்துவமனைக்குச் சென்றனர். புயலின் கோர தாண்டவத்தால் சிலாபத்தில் மின்தடை ஏற்பட்டது. மின்தடை மற்றும் வெள்ளத்திற்கு மத்தியில் ஆபத்திலிருந்த குழந்தைகளை ஹெலிகொப்டரில்  மீட்டனர். ரத்மலானாவில் இருந்து பெல்-412 ஹெலிகாப்டர் மூலம் குழந்தைகளை மீட்டு கட்டுநாயக்கவிற்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவர்கள் அவசர சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். நாட்டில் கோரதாண்டவமாடிய புயலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வெள்ளம் , மண்சரிவு என்பவற்றில் சிக்கிப் போராடிக் கொண்டிருப்பவர்களை விமானப்படை, கடற்படை, இராணுவப்படை விமானங்களில் மீட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement