• May 19 2026

குளிரால் உயிரிழக்கும் குழந்தைகள்; ஒரே நாளில் 11 பேர் பலியாகிய சோகம்

Aathira / Dec 19th 2025, 10:05 am
image

காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்து, சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மழை மற்றும் குளிர் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக அந்நாட்டு  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில், காசாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் அங்குள்ள மக்கள் குழந்தைகளுடன் அவதிப்படும்  காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரை வேதனையடைய செய்துள்ளது. 

மேலும், இரவு முழுவதும் பெய்துவரும் மழையால் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பதற்கு வீடுகள் இன்றி கூடாரம் அமைத்து வசித்து வரும்நிலையில், அதற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து கடும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர். 

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது கடும் குளிர், வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..          


குளிரால் உயிரிழக்கும் குழந்தைகள்; ஒரே நாளில் 11 பேர் பலியாகிய சோகம் காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.இதன் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்து, சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.மழை மற்றும் குளிர் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக அந்நாட்டு  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், காசாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் அங்குள்ள மக்கள் குழந்தைகளுடன் அவதிப்படும்  காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரை வேதனையடைய செய்துள்ளது. மேலும், இரவு முழுவதும் பெய்துவரும் மழையால் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.இருப்பதற்கு வீடுகள் இன்றி கூடாரம் அமைத்து வசித்து வரும்நிலையில், அதற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து கடும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.இதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது கடும் குளிர், வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.          

Advertisement

Advertisement

Advertisement