• Oct 04 2026

மரபுரிமைக்கு உயிரோட்டம் நிகழ்வில் முதல்வர் மதிவதனி பங்கேற்பு

Aathira / Oct 3rd 2026, 12:53 pm
image

யாழ்ப்பாண அரசு கால தொல்லியல் மரபுரிமை சின்னமாகிய யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமையையும் தமிழர் ஆட்சிப் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் சங்கிலியன் அரண்மனைப் பகுதிகளைப் புனரமைத்துப் பாதுகாப்பதற்கான பணிகள் தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

தொல்பொருள் திணைக்களத்தின் “மரபுரிமைக்கு உயிரூட்டுவோம்” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சங்கிலியன் அரண்மனைப் பகுதியை புனரமைத்துப் பாதுகாப்பதற்காக 0.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  

மேற்படி சங்கிலியன் அரண்மனைப் பகுதியை அபிவிருத்தி செய்யும் ஆரம்பநாள் நிகழ்வில் புனரமைப்பு பணிகள் பூஜை வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

இந்நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர், மாவட்ட செயலக அதிகாரிகள், மாநகரசபை உறுப்பினர்கள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மரபுரிமைக்கு உயிரோட்டம் நிகழ்வில் முதல்வர் மதிவதனி பங்கேற்பு யாழ்ப்பாண அரசு கால தொல்லியல் மரபுரிமை சின்னமாகிய யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமையையும் தமிழர் ஆட்சிப் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் சங்கிலியன் அரண்மனைப் பகுதிகளைப் புனரமைத்துப் பாதுகாப்பதற்கான பணிகள் தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.தொல்பொருள் திணைக்களத்தின் “மரபுரிமைக்கு உயிரூட்டுவோம்” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சங்கிலியன் அரண்மனைப் பகுதியை புனரமைத்துப் பாதுகாப்பதற்காக 0.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  மேற்படி சங்கிலியன் அரண்மனைப் பகுதியை அபிவிருத்தி செய்யும் ஆரம்பநாள் நிகழ்வில் புனரமைப்பு பணிகள் பூஜை வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர், மாவட்ட செயலக அதிகாரிகள், மாநகரசபை உறுப்பினர்கள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement