அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு அச்சிடப்பட்ட சுமார் 1,00,000 வாகன இலக்கத் தகடுகளில், இருபது தகடுகளை மட்டுமே வாகன உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட சுமார் 100,000 வாகன இலக்கத் தகடுகள், உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாததால், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் தேங்கிக் கிடந்தன.
உரிமை மாற்றத்தின்போது மாகாணங்களை மாற்றிக்கொண்ட வாகனங்களிடமிருந்து பெறப்பட்ட பெருமளவிலான வாகனப் பதிவுத் தகடுகள் (number plates), அக்காலகட்டத்தில் வாகன இறக்குமதி நடைபெறாத நிலையிலும் இவ்வாறு குவிந்திருந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜூன் 30-ஆம் திகதிக்குள் தேங்கிக்கிடக்கும் இந்த வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக்கொள்ளாவிட்டால் அவை பழைய இரும்புக்கு அனுப்பப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது.
எனினும், அக்குறிப்பிட்ட காலத்திற்குள் 20-க்கும் குறைவான இலக்கத் தகடுகளே உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஒரு புதிய நிறுவனம் தற்போது வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாத அனைத்து இலக்கத் தகடுகளையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஒரு லட்சம் வாகன இலக்கத் தகடுகள் தேக்கம் – பெற்றுச் சென்றது 20 மட்டுமே அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு அச்சிடப்பட்ட சுமார் 1,00,000 வாகன இலக்கத் தகடுகளில், இருபது தகடுகளை மட்டுமே வாகன உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட சுமார் 100,000 வாகன இலக்கத் தகடுகள், உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாததால், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் தேங்கிக் கிடந்தன.உரிமை மாற்றத்தின்போது மாகாணங்களை மாற்றிக்கொண்ட வாகனங்களிடமிருந்து பெறப்பட்ட பெருமளவிலான வாகனப் பதிவுத் தகடுகள் (number plates), அக்காலகட்டத்தில் வாகன இறக்குமதி நடைபெறாத நிலையிலும் இவ்வாறு குவிந்திருந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.ஜூன் 30-ஆம் திகதிக்குள் தேங்கிக்கிடக்கும் இந்த வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக்கொள்ளாவிட்டால் அவை பழைய இரும்புக்கு அனுப்பப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது.எனினும், அக்குறிப்பிட்ட காலத்திற்குள் 20-க்கும் குறைவான இலக்கத் தகடுகளே உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.ஒரு புதிய நிறுவனம் தற்போது வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாத அனைத்து இலக்கத் தகடுகளையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.