குச்சவெளி பிரதேச சபை இன்றைய அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
குச்சவெளி - திரியாய் தமிழ் பாடசாலைக்கு இரண்டு குப்பை தொட்டிகளை வழங்குமாறு கேட்ட தமிழரசு கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு, அதனை வழங்க மறுத்ததுடன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரிடம் என்னை காட்டி கொடுத்தது நீதான் என்று திட்டி தீர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர், குறித்த சபை உறுப்பினர் தனுசனை இவ்வாறு திட்டியுள்ளார்.
மேலும் 'நீ ஆயுதம் வைத்துள்ளாய், என்னை கொலை செய்வதற்கு முயற்சிக்கின்றாய்' என்று பொய் குற்றம்சாட்டி, பிரதேச சபை உறுப்பினரை சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
அதனால் இச் சபை அமர்வு அமளிதுமளியாக மாறியமை குறிப்பிடத்தக்கது.
குச்சவெளி பிரதேச சபையில் அமளிதுமளி; தமிழரசு கட்சி உறுப்பினரை ஆயுததாரி என திட்டிய தவிசாளர் குச்சவெளி பிரதேச சபை இன்றைய அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. குச்சவெளி - திரியாய் தமிழ் பாடசாலைக்கு இரண்டு குப்பை தொட்டிகளை வழங்குமாறு கேட்ட தமிழரசு கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு, அதனை வழங்க மறுத்ததுடன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரிடம் என்னை காட்டி கொடுத்தது நீதான் என்று திட்டி தீர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குச்சவெளி பிரதேச சபை தவிசாளர், குறித்த சபை உறுப்பினர் தனுசனை இவ்வாறு திட்டியுள்ளார். மேலும் 'நீ ஆயுதம் வைத்துள்ளாய், என்னை கொலை செய்வதற்கு முயற்சிக்கின்றாய்' என்று பொய் குற்றம்சாட்டி, பிரதேச சபை உறுப்பினரை சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.அதனால் இச் சபை அமர்வு அமளிதுமளியாக மாறியமை குறிப்பிடத்தக்கது.