• May 20 2026

நீர் கட்டணத்தில் மாற்றமா? வெளியான அறிவிப்பு!

Chithra / May 19th 2026, 8:42 pm
image

நாட்டின் தற்போதைய நீர் கட்டணத்தை 2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலப்பகுதிக்குள் எவ்வித திருத்தங்களுமின்றி, அவ்வாறே பேணிச் செல்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இதற்கான விசேட முன்மொழிவுக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த 15.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நீர் கட்டண சூத்திரத்திற்கு அமைய, பிரதான செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, நீர் விற்பனைக்கான அலகுச் செலவு அரையாண்டுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி அறிக்கைக்கமைய மேற்கொள்ளப்பட்ட நிதிப் பகுப்பாய்வின்படி, தற்போதைய நீர் கட்டணத்தின் மூலமே சபையின் முழுமையான செயல்பாட்டுச் செலவுகளை ஈடுசெய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தாத வகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்குள் நீர் விற்பனைக்கான அலகுச் செலவை அதிகரிக்காமல் அதே மட்டத்தில் பேணிச் செல்வதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு அமைய, தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை தனது முழுமையான உடன்பாட்டை வழங்கியுள்ளது.


நீர் கட்டணத்தில் மாற்றமா வெளியான அறிவிப்பு நாட்டின் தற்போதைய நீர் கட்டணத்தை 2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலப்பகுதிக்குள் எவ்வித திருத்தங்களுமின்றி, அவ்வாறே பேணிச் செல்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இதற்கான விசேட முன்மொழிவுக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.கடந்த 15.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நீர் கட்டண சூத்திரத்திற்கு அமைய, பிரதான செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, நீர் விற்பனைக்கான அலகுச் செலவு அரையாண்டுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட வேண்டும்.இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி அறிக்கைக்கமைய மேற்கொள்ளப்பட்ட நிதிப் பகுப்பாய்வின்படி, தற்போதைய நீர் கட்டணத்தின் மூலமே சபையின் முழுமையான செயல்பாட்டுச் செலவுகளை ஈடுசெய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பொதுமக்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தாத வகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்குள் நீர் விற்பனைக்கான அலகுச் செலவை அதிகரிக்காமல் அதே மட்டத்தில் பேணிச் செல்வதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.இந்தத் தீர்மானத்திற்கு அமைய, தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை தனது முழுமையான உடன்பாட்டை வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement