• Sep 06 2026

இன்று பல மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

dorin / Sep 5th 2026, 11:18 am
image

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (5) பிற்பகலில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இதற்கு மேலதிகமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (05) நண்பகல் 12.08 அளவில் மொரட்டுவ, கெஸ்பேவ, பொல்கஸ்ஓவிட்ட, ஹந்தபாங்கொட, ஸ்ரீ பலாபத்தல, பொகவந்தலாவ, இதல்கஸ்சின்ன, யுதகனாவ, கொட்டியாகல மற்றும் பாணம ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

 

இன்று பல மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு நாட்டின் பல மாகாணங்களில் இன்று (5) பிற்பகலில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.இதற்கு மேலதிகமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.அதற்கிணங்க இன்று (05) நண்பகல் 12.08 அளவில் மொரட்டுவ, கெஸ்பேவ, பொல்கஸ்ஓவிட்ட, ஹந்தபாங்கொட, ஸ்ரீ பலாபத்தல, பொகவந்தலாவ, இதல்கஸ்சின்ன, யுதகனாவ, கொட்டியாகல மற்றும் பாணம ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement