வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் திரிந்த கட்டாக்காலி கால்நடைகள் நேற்று (ஏப்ரல் 29) பிரதேச சபையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
கங்கன்குளம், செட்டிகுளம் மற்றும் முகத்தான்குளம் ஆகிய வீதிகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளே இவ்வாறு பிடிக்கப்பட்டு, தற்போது வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கால்நடைகளின் உரிமையாளர்கள், அவற்றுக்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, தண்டப்பணங்களைச் செலுத்தித் தமது கால்நடைகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பிடிகாசு ஒரு மாட்டிற்கு ரூ. 2,500.00 , தண்டப்பணம் (பிடிக்கப்பட்ட இடத்தில் செலுத்தினால்)ரூ. 2,500.00 , ஏற்றியிறக்கல் கட்டணம் (அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்) ரூ. 1000.00 , தினசரி பராமரிப்புச் செலவு ஒரு மாட்டிற்கு ரூ. 300.00 (ஒரு நாளைக்கு) ஆகும்
உரிமையாளர்கள் எதிர்வரும் பத்து நாட்களுக்குள் உரிய தண்டப்பணத்தைச் செலுத்தி கால்நடைகளை பொறுப்பேற்கத் தவறினால், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் குறித்த கால்நடைகள் அரசுடைமையாக்கப்பட்டு, பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா செட்டிகுளம் வீதிகளில் திரிந்த கால்நடைகள் பிடிப்பு வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் திரிந்த கட்டாக்காலி கால்நடைகள் நேற்று (ஏப்ரல் 29) பிரதேச சபையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.கங்கன்குளம், செட்டிகுளம் மற்றும் முகத்தான்குளம் ஆகிய வீதிகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளே இவ்வாறு பிடிக்கப்பட்டு, தற்போது வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.குறித்த கால்நடைகளின் உரிமையாளர்கள், அவற்றுக்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, தண்டப்பணங்களைச் செலுத்தித் தமது கால்நடைகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுபிடிகாசு ஒரு மாட்டிற்கு ரூ. 2,500.00 , தண்டப்பணம் (பிடிக்கப்பட்ட இடத்தில் செலுத்தினால்)ரூ. 2,500.00 , ஏற்றியிறக்கல் கட்டணம் (அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்) ரூ. 1000.00 , தினசரி பராமரிப்புச் செலவு ஒரு மாட்டிற்கு ரூ. 300.00 (ஒரு நாளைக்கு) ஆகும்உரிமையாளர்கள் எதிர்வரும் பத்து நாட்களுக்குள் உரிய தண்டப்பணத்தைச் செலுத்தி கால்நடைகளை பொறுப்பேற்கத் தவறினால், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் குறித்த கால்நடைகள் அரசுடைமையாக்கப்பட்டு, பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.