• Aug 19 2026

கிளிநொச்சி ஊடக அமைய காணி, கட்டடத்தை விடுவிக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு

Chithra / Aug 19th 2026, 12:37 pm
image


கிளிநொச்சி ஏ9 வீதியின் காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணி மற்றும் கட்டடத்தை விடுவித்து தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.


கிளிநொச்சி ஊடக இல்லம் சார்பில், குறித்த காணி மற்றும் கட்டடத்தை விடுவித்து தருமாறு சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


இந்தக் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில் கோரியிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு குறித்த காணியையும் கட்டடத்தையும் விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


பாதுகாப்பு அமைச்சின் இந்த நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P. வீரசிங்க, கிளிநொச்சி ஊடக அமையத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.


2009ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த காணி மற்றும் கட்டடம் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்டு வந்த நிலையில், தற்போது அவை இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளன.


இதேவேளை, குறித்த காணியின் ஒரு புறத்திலிருந்த நிலப்பகுதி கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும், மறுபுறத்திலிருந்த நிலப்பகுதி யோகர் சுவாமிகள் நிலையத்திற்கும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும், ஊடக அமையத்திற்குச் சொந்தமான காணி மற்றும் கட்டடம் மாத்திரமே இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி ஊடக அமைய காணி, கட்டடத்தை விடுவிக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு கிளிநொச்சி ஏ9 வீதியின் காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணி மற்றும் கட்டடத்தை விடுவித்து தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.கிளிநொச்சி ஊடக இல்லம் சார்பில், குறித்த காணி மற்றும் கட்டடத்தை விடுவித்து தருமாறு சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்தக் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில் கோரியிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு குறித்த காணியையும் கட்டடத்தையும் விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.பாதுகாப்பு அமைச்சின் இந்த நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P. வீரசிங்க, கிளிநொச்சி ஊடக அமையத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.2009ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த காணி மற்றும் கட்டடம் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்டு வந்த நிலையில், தற்போது அவை இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளன.இதேவேளை, குறித்த காணியின் ஒரு புறத்திலிருந்த நிலப்பகுதி கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும், மறுபுறத்திலிருந்த நிலப்பகுதி யோகர் சுவாமிகள் நிலையத்திற்கும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், ஊடக அமையத்திற்குச் சொந்தமான காணி மற்றும் கட்டடம் மாத்திரமே இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement