• May 20 2026

‘உங்களை கைவிட்டு செல்ல முடியுமா?’ தமது உயிர்களை பொருட்படுத்தாமல் செல்லப்பிராணிகளுக்காக போராடும் மக்கள்!

shanu / Nov 30th 2025, 12:51 pm
image

நாட்டைப் புரட்டிப் போட்டுள்ள டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித்தவித்த தமது செல்லப்பிராணிகளை பெரும் சிரமத்தின் மத்தியிலும் பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் காணொளிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


நாட்டில் கடந்த இரு நாள்களாக டிட்வா புயல் கோரதாண்டவமாடியது. புயலால் நாடுமுழுவதுமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 



வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, காற்று உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் பல உயிரிழப்புக்களும் பாதிப்புக்களும் பதிவாகியுள்ளன. 



புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தத்தளித்தனர். அவர்களை ஹெலிகொப்டரில் மீட்கும் பணிகளில்  விமானப்படை, இராணுவப்படை  தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. 


புயலின் கோர தாண்டவத்திற்குள் மக்கள் மட்டுமன்றி கால்நடைகள், செல்லப்பிராணிகள் என அனைத்தும் சிக்கிக் கொண்டன. 



மக்களை மீட்க விமானப்படை, இராணுவப்படை அதிகாரிகள் தீவிரமாக செயற்படுவது போல தத்தமது செல்லப்பிராணிகளை மீட்க குறித்த நபர்களும் போராடியுள்ளனர். 


இதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகளை விவசாயிகள் படகுகள், வாகனங்கள் மூலம் போராடி மீட்டனர். 


அதேபோன்று வெள்ளத்திற்குள் மூழ்கி தத்தளித்த செல்லப்பிராணிகளை தாமும் வெள்ளத்திற்குள் நீந்தி தோளில் சுமந்தும் தூக்கியும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 


நாட்டை உலுக்கிய அனர்த்தத்தில் தம்முயிரைக் காக்க ஆங்காங்கே ஓடும் மத்தியில் தம்முயிரைப் பொருட்படுத்தாமல் தமது செல்லப்பிராணிகளை சிரமத்தின் மத்தியிலும் பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் காணொளிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

‘உங்களை கைவிட்டு செல்ல முடியுமா’ தமது உயிர்களை பொருட்படுத்தாமல் செல்லப்பிராணிகளுக்காக போராடும் மக்கள் நாட்டைப் புரட்டிப் போட்டுள்ள டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித்தவித்த தமது செல்லப்பிராணிகளை பெரும் சிரமத்தின் மத்தியிலும் பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் காணொளிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.நாட்டில் கடந்த இரு நாள்களாக டிட்வா புயல் கோரதாண்டவமாடியது. புயலால் நாடுமுழுவதுமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, காற்று உள்ளிட்டவற்றின் தாக்கத்தால் பல உயிரிழப்புக்களும் பாதிப்புக்களும் பதிவாகியுள்ளன. புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தத்தளித்தனர். அவர்களை ஹெலிகொப்டரில் மீட்கும் பணிகளில்  விமானப்படை, இராணுவப்படை  தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. புயலின் கோர தாண்டவத்திற்குள் மக்கள் மட்டுமன்றி கால்நடைகள், செல்லப்பிராணிகள் என அனைத்தும் சிக்கிக் கொண்டன. மக்களை மீட்க விமானப்படை, இராணுவப்படை அதிகாரிகள் தீவிரமாக செயற்படுவது போல தத்தமது செல்லப்பிராணிகளை மீட்க குறித்த நபர்களும் போராடியுள்ளனர். இதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகளை விவசாயிகள் படகுகள், வாகனங்கள் மூலம் போராடி மீட்டனர். அதேபோன்று வெள்ளத்திற்குள் மூழ்கி தத்தளித்த செல்லப்பிராணிகளை தாமும் வெள்ளத்திற்குள் நீந்தி தோளில் சுமந்தும் தூக்கியும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நாட்டை உலுக்கிய அனர்த்தத்தில் தம்முயிரைக் காக்க ஆங்காங்கே ஓடும் மத்தியில் தம்முயிரைப் பொருட்படுத்தாமல் தமது செல்லப்பிராணிகளை சிரமத்தின் மத்தியிலும் பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் காணொளிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement