• Sep 10 2026

அதிகாலையில் கால்வாயில் கவிழ்ந்த பேருந்து - 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Sep 10th 2026, 9:38 am
image


பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் 7ஆவது கிலோமீற்றர் பகுதியில் தனியார் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். 


இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


மெதிரிகிரியவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, குறித்த பகுதி அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


விபத்துக்கான காரணம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


அதிகாலையில் கால்வாயில் கவிழ்ந்த பேருந்து - 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் 7ஆவது கிலோமீற்றர் பகுதியில் தனியார் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மெதிரிகிரியவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, குறித்த பகுதி அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.விபத்துக்கான காரணம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement