நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பேருந்து ஒன்று வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துள்ளது.
இந்தச் சம்பவம் மொனராகலை - கொழும்பு பிரதான சாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சாலையில் பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து, அந்த சாலையில் இருந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
கிட்டத்தட்ட பேருந்தின் அரைவாசிப் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. குறித்த பேருந்தில்
23 பேர் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளத்தில் பேருந்து மூழ்கியதையடுத்து பயணிகள் அனைவரும் உயிரைக் கையில் பிடித்தவாறு தவித்துள்ளனர்.
பின்னர் அதில் பயணித்த ஆண்கள் பெரும் சிரமத்திற்குள் பேருந்திலிருந்து வெளியே வர முயற்சித்து பேருந்தின் மேல் ஏறினர்.
அதன்பின்னர் அந்தப்பகுதியில் பயணித்த பலரது உதவியுடன் பேருந்தில் பயணித்த 23 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்களைப் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்த பேருந்து; பயணிகள் பாதுகாப்பாக மீட்பு நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பேருந்து ஒன்று வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துள்ளது. இந்தச் சம்பவம் மொனராகலை - கொழும்பு பிரதான சாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சாலையில் பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து, அந்த சாலையில் இருந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. கிட்டத்தட்ட பேருந்தின் அரைவாசிப் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. குறித்த பேருந்தில் 23 பேர் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வெள்ளத்தில் பேருந்து மூழ்கியதையடுத்து பயணிகள் அனைவரும் உயிரைக் கையில் பிடித்தவாறு தவித்துள்ளனர். பின்னர் அதில் பயணித்த ஆண்கள் பெரும் சிரமத்திற்குள் பேருந்திலிருந்து வெளியே வர முயற்சித்து பேருந்தின் மேல் ஏறினர். அதன்பின்னர் அந்தப்பகுதியில் பயணித்த பலரது உதவியுடன் பேருந்தில் பயணித்த 23 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்களைப் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.