• May 19 2026

கந்தளாய் அக்போபுரவில் பஸ் விபத்து

Aathira / Dec 19th 2025, 2:19 pm
image

கந்தளாய் – அக்போபுர பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (19) அதிகாலை, ஒரு பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

இன்று அதிகாலை 4.00 மணியளவில், கல்ஓயா பகுதியிலிருந்து கோழிப் பண்ணை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஜெயந்திபுர நோக்கி ஒரு பஸ் பயணித்துக் கொண்டிருந்துள்ளது. அக்போபுர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பஸ் சென்றுகொண்டிருந்த போது, திடீரென காட்டு மான் ஒன்று குறுக்காக பாய்ந்துள்ளது.

இதன்போது மானை மோதாமல் தவிர்க்க முயன்ற சாரதி, பஸ்ஸை திருப்பியபோது அது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அங்கிருந்த கடை ஒன்றிற்கு அருகில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பஸ் பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட சமயத்தில் பஸ்ஸில் அதன் உரிமையாளரும் சாரதியும் மட்டுமே இருந்ததாகவும், இருவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கந்தளாய் அக்போபுரவில் பஸ் விபத்து கந்தளாய் – அக்போபுர பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (19) அதிகாலை, ஒரு பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:இன்று அதிகாலை 4.00 மணியளவில், கல்ஓயா பகுதியிலிருந்து கோழிப் பண்ணை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஜெயந்திபுர நோக்கி ஒரு பஸ் பயணித்துக் கொண்டிருந்துள்ளது. அக்போபுர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பஸ் சென்றுகொண்டிருந்த போது, திடீரென காட்டு மான் ஒன்று குறுக்காக பாய்ந்துள்ளது.இதன்போது மானை மோதாமல் தவிர்க்க முயன்ற சாரதி, பஸ்ஸை திருப்பியபோது அது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அங்கிருந்த கடை ஒன்றிற்கு அருகில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பஸ் பலத்த சேதமடைந்துள்ளது.விபத்து ஏற்பட்ட சமயத்தில் பஸ்ஸில் அதன் உரிமையாளரும் சாரதியும் மட்டுமே இருந்ததாகவும், இருவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement