தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 5 மணியளவில் இடம்பெற்றதாகவும், தாக்குதல் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராக போதகர் அன்டனி செபஸ்டியன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அந்தப் பொறுப்பில் இருந்து பல்வேறு நிர்வாக விடயங்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் வழிநடத்தல் தொடர்பான பயிற்சிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
இதன் இறுதி நாளான நேற்று, பேராயர் பேத்மதயாளன் தலைமையில் போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது போதகர்களின் ஓய்வூதியம், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து, நிகழ்வு நடைபெற்ற பகுதியில் இருந்த தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் செயலாளரின் மகன், போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் கண்டவர்களின் தகவலின்படி, பேராயருடன் போதகர் கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது, தாக்குதல் மேற்கொண்ட நபர் அவரது தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று தடவைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், தாக்குதலைத் தடுக்க அங்கிருந்தவர்கள் முயற்சித்ததாகவும், தாக்குதல் மேற்கொண்ட நபரின் தந்தையான தென்னிந்திய திருச்சபையின் செயலாளர் போதகர், சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
எனினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளின் முடிவுகள் வெளியாகவில்லை.
இதேவேளை, தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் நிர்வாக குறைபாடுகள் மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பில் போதகர் அன்டனி செபஸ்டியன் உள்ளிட்ட சிலர் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒன்பது மாதங்களாக செயற்குழு மற்றும் நிதிக்குழு கூட்டப்படாமை, நிதி பயன்படுத்தப்பட்டமை, நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் அழுத்தங்களை முன்வைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், திருச்சபையின் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகியோர் திருச்சபை யாப்புக்கு முரணாக இடைநிறுத்தப்பட்டமை, ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவர் தலைமையேற்று செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2ஆம் திகதி அவரது பொறுப்பிலிருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும், அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் நிர்வாகம் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், கணக்கு விபரங்கள் தொடர்பில் தெளிவு தேவைப்படுவதாகவும் திருச்சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சபை நிர்வாகிகள் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி சுமார் 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனம் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் மீது கொடூரத் தாக்குதல் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 5 மணியளவில் இடம்பெற்றதாகவும், தாக்குதல் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராக போதகர் அன்டனி செபஸ்டியன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அந்தப் பொறுப்பில் இருந்து பல்வேறு நிர்வாக விடயங்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த மூன்று நாட்களாக தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் வழிநடத்தல் தொடர்பான பயிற்சிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.இதன் இறுதி நாளான நேற்று, பேராயர் பேத்மதயாளன் தலைமையில் போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது போதகர்களின் ஓய்வூதியம், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கலந்துரையாடலின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து, நிகழ்வு நடைபெற்ற பகுதியில் இருந்த தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் செயலாளரின் மகன், போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.சம்பவத்தை நேரில் கண்டவர்களின் தகவலின்படி, பேராயருடன் போதகர் கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது, தாக்குதல் மேற்கொண்ட நபர் அவரது தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று தடவைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.மேலும், தாக்குதலைத் தடுக்க அங்கிருந்தவர்கள் முயற்சித்ததாகவும், தாக்குதல் மேற்கொண்ட நபரின் தந்தையான தென்னிந்திய திருச்சபையின் செயலாளர் போதகர், சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எனினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளின் முடிவுகள் வெளியாகவில்லை.இதேவேளை, தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் நிர்வாக குறைபாடுகள் மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பில் போதகர் அன்டனி செபஸ்டியன் உள்ளிட்ட சிலர் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒன்பது மாதங்களாக செயற்குழு மற்றும் நிதிக்குழு கூட்டப்படாமை, நிதி பயன்படுத்தப்பட்டமை, நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் அழுத்தங்களை முன்வைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும், திருச்சபையின் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகியோர் திருச்சபை யாப்புக்கு முரணாக இடைநிறுத்தப்பட்டமை, ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவர் தலைமையேற்று செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2ஆம் திகதி அவரது பொறுப்பிலிருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும், அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே, தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் நிர்வாகம் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், கணக்கு விபரங்கள் தொடர்பில் தெளிவு தேவைப்படுவதாகவும் திருச்சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.திருச்சபை நிர்வாகிகள் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி சுமார் 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனம் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.