ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிணையில் வழங்கப்பட்ட கபில சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கையூட்டல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது, கையூட்டல் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதன் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்யுமாறு கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னரே பிணை வழங்கப்பட்டிருந்தது.
கபில சந்திரசேன தனக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்தின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாகவும் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை ஒன்றையும் பிறப்பிக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எயார்பஸ் கொள்வனவில் இலஞ்சம்; பிணையில் விடுதலையான கபில சந்திரசேன உயிரிழப்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் பிணையில் வழங்கப்பட்ட கபில சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கையூட்டல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.முன்னதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது, கையூட்டல் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதன் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்யுமாறு கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னரே பிணை வழங்கப்பட்டிருந்தது.கபில சந்திரசேன தனக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்தின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாகவும் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.எனவே, அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை ஒன்றையும் பிறப்பிக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.