பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் அமைந்துள்ள 141ஆம் தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (23) முற்பகல் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டுபாயில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ‘வனாத்தே சது’ எனப்படும் திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் உதவியாளர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், வீட்டின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் வீட்டின் மீது கைக்குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சி அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திட்டமிட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்களின் பின்னணியில் இவ்வாறான கைக்குண்டுத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பாதுகாப்புப் படையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, கடந்த நாட்களில் இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் உள்ள வீடொன்றின் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அதில் வீசப்பட்ட கைக்குண்டுகளில் ஒன்று வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதாள உலகக் குழு உறுப்பினரின்வீட்டின் மீது குண்டுவீச்சு CCTVயில் சிக்கிய அதிர்ச்சி பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் அமைந்துள்ள 141ஆம் தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (23) முற்பகல் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.டுபாயில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ‘வனாத்தே சது’ எனப்படும் திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் உதவியாளர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும், வீட்டின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் வீட்டின் மீது கைக்குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சி அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.திட்டமிட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்களின் பின்னணியில் இவ்வாறான கைக்குண்டுத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பாதுகாப்புப் படையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.இதேவேளை, கடந்த நாட்களில் இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் உள்ள வீடொன்றின் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அதில் வீசப்பட்ட கைக்குண்டுகளில் ஒன்று வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.