• Apr 17 2026

இலங்கை தொடருக்கு முன் ஆப்கானிஸ்தான் அணியில் பெரிய மாற்றம்!

Ziya / Mar 5th 2026, 5:59 pm
image

ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி, இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள வெள்ளைபந்து தொடருக்கு முன் தனது அணியின் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேசிய தேர்வுக் குழு இன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணிகளை இறுதி செய்தது.


இந்த மாற்றங்களில் முக்கியமாக, டி20 அணியின் கேப்டனாக இருந்த ரஷீத் கான் பதவியிலிருந்து விலகிய நிலையில், முன்னணி துடுப்பாட்ட வீரர் இப்ராஹிம் ஜத்ரான் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


அதேவேளை, 2026 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூகி, ஆல்-ரவுண்டர் குல்பதீன் நயீப் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகம்மது இஷாக் ஆகியோர் இரு அணிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.


சமீபத்திய ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பிலால் சமி ஒருநாள் அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதுடன், டி20 அணியில் ரிசர்வ் வீரராகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.


இந்த மாற்றங்கள் குறித்து ஏசிபியின் தலைமைத் தேர்வாளர் அஹ்மத் ஷா சுலைமான் கில் கருத்து தெரிவிக்கையில், 


ரஷீத் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி பல முக்கிய வெற்றிகளை பெற்றதாகவும், குறிப்பாக 2024 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி வரை சென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்றும் கூறினார்.


அதேசமயம், அணியின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக டி20 அணியில் தலைமையை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள இப்ராஹிம் ஜத்ரான்க்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இலங்கை தொடருக்கு முன் ஆப்கானிஸ்தான் அணியில் பெரிய மாற்றம் ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி, இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள வெள்ளைபந்து தொடருக்கு முன் தனது அணியின் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேசிய தேர்வுக் குழு இன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணிகளை இறுதி செய்தது.இந்த மாற்றங்களில் முக்கியமாக, டி20 அணியின் கேப்டனாக இருந்த ரஷீத் கான் பதவியிலிருந்து விலகிய நிலையில், முன்னணி துடுப்பாட்ட வீரர் இப்ராஹிம் ஜத்ரான் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, 2026 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூகி, ஆல்-ரவுண்டர் குல்பதீன் நயீப் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகம்மது இஷாக் ஆகியோர் இரு அணிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.சமீபத்திய ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பிலால் சமி ஒருநாள் அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதுடன், டி20 அணியில் ரிசர்வ் வீரராகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த மாற்றங்கள் குறித்து ஏசிபியின் தலைமைத் தேர்வாளர் அஹ்மத் ஷா சுலைமான் கில் கருத்து தெரிவிக்கையில், ரஷீத் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி பல முக்கிய வெற்றிகளை பெற்றதாகவும், குறிப்பாக 2024 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி வரை சென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்றும் கூறினார்.அதேசமயம், அணியின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக டி20 அணியில் தலைமையை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள இப்ராஹிம் ஜத்ரான்க்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement