• May 26 2026

மாற்றியமைக்கப்பட்ட வாகன இலக்கத் தகடுகளுக்குத் தடை: விதிமீறினால் அபராதம்!

Chithra / May 25th 2026, 8:30 am
image

உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரநிர்ணயமற்ற இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் எனப் பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வாகன இலக்கத்தை 'A4' அளவிலான காகிதத்தில் அச்சிட்டுக் காட்சிப்படுத்த மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


விநியோகஸ்தர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 10 மாதங்களாக இலக்கத் தகடுகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டதால், சுமார் 400,000 தகடுகள் தேங்கியுள்ளன. எனினும், எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இதற்கிடையில், உத்தியோகபூர்வமற்ற இலக்கத் தகடுகளைக் காட்சிப்படுத்தும் வாகனங்களுக்குப் பொலிஸார் அபராதம் விதிப்பது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்யாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராகத் தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.


மாற்றியமைக்கப்பட்ட வாகன இலக்கத் தகடுகளுக்குத் தடை: விதிமீறினால் அபராதம் உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரநிர்ணயமற்ற இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் எனப் பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வாகன இலக்கத்தை 'A4' அளவிலான காகிதத்தில் அச்சிட்டுக் காட்சிப்படுத்த மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.விநியோகஸ்தர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 10 மாதங்களாக இலக்கத் தகடுகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டதால், சுமார் 400,000 தகடுகள் தேங்கியுள்ளன. எனினும், எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.இதற்கிடையில், உத்தியோகபூர்வமற்ற இலக்கத் தகடுகளைக் காட்சிப்படுத்தும் வாகனங்களுக்குப் பொலிஸார் அபராதம் விதிப்பது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்யாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராகத் தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement