கேகாலை - கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறையில் பிறந்த குழந்தையொன்றை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 30 வயதுடைய பெண் நேற்று (01) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, அன்றைய தினமே பிறந்ததாகக் கருதப்படும் குழந்தையை கழிவறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு, அங்கிருந்து செல்ல குறித்த பெண் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் பெண்ணை தடுத்து நிறுத்தி, சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண்ணும் குழந்தையும் கரவனெல்ல ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைத் தகவலின்படி, குழந்தை தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பேருந்து நிலைய கழிவறைக்குள் பிறந்த குழந்தை - தப்பியோட முயன்ற தாய் மடக்கிப்பிடிப்பு கேகாலை - கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறையில் பிறந்த குழந்தையொன்றை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த 30 வயதுடைய பெண் நேற்று (01) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முதற்கட்ட விசாரணைகளின்படி, அன்றைய தினமே பிறந்ததாகக் கருதப்படும் குழந்தையை கழிவறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு, அங்கிருந்து செல்ல குறித்த பெண் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் பெண்ணை தடுத்து நிறுத்தி, சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண்ணும் குழந்தையும் கரவனெல்ல ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனைத் தகவலின்படி, குழந்தை தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.