• Oct 24 2026

உலக போலியோ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

Ziya / Oct 23rd 2026, 2:41 pm
image

உலக போலியோ தினத்தை முன்னிட்டு, கிண்ணியா மத்திய கல்லூரியின் தரம்04 மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி இன்று காலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.


கிண்ணியா மத்திய கல்லூரியிலிருந்து ஆரம்பமான இந்நடைபவனி, கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிறைவடைந்துள்ளது.


இதன்போது மாணவர்கள் போலியோ ஒழிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு,“போலியோவை முற்றாக ஒழிப்போம்!”என்ற கோஷத்துடன் உற்சாகமாக நடைபவனியில் பங்கேற்றனர்.


இத்தகைய அர்த்தமுள்ள விழிப்புணர்வு நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.


உலக போலியோ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி உலக போலியோ தினத்தை முன்னிட்டு, கிண்ணியா மத்திய கல்லூரியின் தரம்04 மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி இன்று காலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.கிண்ணியா மத்திய கல்லூரியிலிருந்து ஆரம்பமான இந்நடைபவனி, கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிறைவடைந்துள்ளது.இதன்போது மாணவர்கள் போலியோ ஒழிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு,“போலியோவை முற்றாக ஒழிப்போம்”என்ற கோஷத்துடன் உற்சாகமாக நடைபவனியில் பங்கேற்றனர்.இத்தகைய அர்த்தமுள்ள விழிப்புணர்வு நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement