ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் எதிர்காலத்தில் நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் திடுக்கிடும் கருத்துக்களை வெளியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பழிவாங்கும் நோக்கில் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஜனாதிபதி அநுரகுமாரவிற்கே 'புதைகுழியாக' மாறும் என அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்ட நாட்களைப் போல பல மடங்கு காலம் அநுர சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்" என அவர் நேரடி எச்சரிக்கை விடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டது.
ஒரு உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலானது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு ஜனாதிபதியின் பயணங்களை 'உத்தியோகபூர்வமானது' மற்றும் 'தனிப்பட்டது' எனப் பிரித்துப் பார்க்க முடியாது என்றும் கம்மன்பில இதன்போது வாதிட்டார்.
அநுர மற்றும் ஹரிணி நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் உதய கம்மன்பில எச்சரிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் எதிர்காலத்தில் நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் திடுக்கிடும் கருத்துக்களை வெளியிட்டார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பழிவாங்கும் நோக்கில் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஜனாதிபதி அநுரகுமாரவிற்கே 'புதைகுழியாக' மாறும் என அவர் குறிப்பிட்டார்.ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்ட நாட்களைப் போல பல மடங்கு காலம் அநுர சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்" என அவர் நேரடி எச்சரிக்கை விடுத்தார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டது. ஒரு உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலானது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு ஜனாதிபதியின் பயணங்களை 'உத்தியோகபூர்வமானது' மற்றும் 'தனிப்பட்டது' எனப் பிரித்துப் பார்க்க முடியாது என்றும் கம்மன்பில இதன்போது வாதிட்டார்.