• May 23 2026

ஈரான் மீது மறுபடியும் தாக்குதலா? அமெரிக்கா, இஸ்ரேலின் ரகசிய சிக்னல்!

Ziya / May 23rd 2026, 10:56 am
image

வளைகுடா பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே கடல்வழி முற்றுகையால் போர் மூண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் துணை தலைமைப் பணியாளரான (Deputy Chief of Staff) டான் ஸ்கேவினோ (Dan Scavino) வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடகப் பதிவு, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதலை நடத்தத் தயாராகிவிட்டதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.


டிரம்ப்பின் மிக நெருங்கிய அதிகாரியான டான் ஸ்கேவினோ, அமெரிக்காவின் மிக அபாயகரமான அணுஆயுதக் குண்டுவீச்சு விமானங்களான பி-2 ஸ்டெல்த் (B-2 Stealth Bomber) விமானங்களின் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதற்கு முன்னரும் இதேபோல் ஸ்கேவினோ பி-2 விமானங்களின் வீடியோவைப் பதிவிட்ட அடுத்த நாளே, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது அதிரடித் தாக்குதலை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனால் தற்போதும் அதே போன்றதொரு தாக்குதல் நடத்தப்படப் போவதன் குறியீடாகவே இது பார்க்கப்படுகிறது.


மெரிக்காவின் வான்வழித் தாக்குதல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்பதை உணர்ந்துள்ள ஈரான், தனது பாதுகாப்பு உத்திகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.


அமெரிக்க ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தங்களின் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிவதைத் தடுப்பதற்காக, மத்திய கிழக்கு பிராந்தியம் (Middle East) முழுவதிலும் உள்ள ஜிபிஎஸ் (GPS) சிக்னல்களை ஈரான் ராணுவம் அதிரடியாகச் செயலிழக்கச் செய்து (Jamming) வருகிறது.


தாக்குதலில் ஈடுபடப் போகும் அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு நடுவானிலும், நடுக் கடலிலும் தடையின்றி எரிபொருள் வழங்குவதற்காக, அமெரிக்காவின் பிரம்மாண்ட எரிபொருள் கப்பல்கள் (US Fuel Tankers) வளைகுடாப் பகுதியில் (Gulf Region) அவசர அவசரமாக நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

ஈரான் மீது மறுபடியும் தாக்குதலா அமெரிக்கா, இஸ்ரேலின் ரகசிய சிக்னல் வளைகுடா பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே கடல்வழி முற்றுகையால் போர் மூண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் துணை தலைமைப் பணியாளரான (Deputy Chief of Staff) டான் ஸ்கேவினோ (Dan Scavino) வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடகப் பதிவு, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதலை நடத்தத் தயாராகிவிட்டதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.டிரம்ப்பின் மிக நெருங்கிய அதிகாரியான டான் ஸ்கேவினோ, அமெரிக்காவின் மிக அபாயகரமான அணுஆயுதக் குண்டுவீச்சு விமானங்களான பி-2 ஸ்டெல்த் (B-2 Stealth Bomber) விமானங்களின் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு முன்னரும் இதேபோல் ஸ்கேவினோ பி-2 விமானங்களின் வீடியோவைப் பதிவிட்ட அடுத்த நாளே, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது அதிரடித் தாக்குதலை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போதும் அதே போன்றதொரு தாக்குதல் நடத்தப்படப் போவதன் குறியீடாகவே இது பார்க்கப்படுகிறது.மெரிக்காவின் வான்வழித் தாக்குதல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்பதை உணர்ந்துள்ள ஈரான், தனது பாதுகாப்பு உத்திகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.அமெரிக்க ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தங்களின் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிவதைத் தடுப்பதற்காக, மத்திய கிழக்கு பிராந்தியம் (Middle East) முழுவதிலும் உள்ள ஜிபிஎஸ் (GPS) சிக்னல்களை ஈரான் ராணுவம் அதிரடியாகச் செயலிழக்கச் செய்து (Jamming) வருகிறது.தாக்குதலில் ஈடுபடப் போகும் அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு நடுவானிலும், நடுக் கடலிலும் தடையின்றி எரிபொருள் வழங்குவதற்காக, அமெரிக்காவின் பிரம்மாண்ட எரிபொருள் கப்பல்கள் (US Fuel Tankers) வளைகுடாப் பகுதியில் (Gulf Region) அவசர அவசரமாக நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement