• Sep 08 2026

அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த அம்பிட்டிய தேரர் அதிரடிக் கைது

Chithra / Sep 7th 2026, 1:01 pm
image


மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று, கடந்த 31ஆம் திகதி அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில், குறித்த அனுமதிகள் தொடர்பில் கோரிக்கை விடுப்பதற்காக பணியக அலுவலகத்திற்குச் சென்ற அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், பணியகத்தின் பணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகளும் வெளியாகிய நிலையில், தேரரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புகள் எழுந்தன.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த அம்பிட்டிய தேரர் அதிரடிக் கைது மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று, கடந்த 31ஆம் திகதி அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், குறித்த அனுமதிகள் தொடர்பில் கோரிக்கை விடுப்பதற்காக பணியக அலுவலகத்திற்குச் சென்ற அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், பணியகத்தின் பணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகளும் வெளியாகிய நிலையில், தேரரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புகள் எழுந்தன.கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement