• May 19 2026

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: கம்பஹா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விளக்கமறியல்!

Ziya / Dec 26th 2025, 4:13 pm
image

இலஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமையக பொலிஸின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை, எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.


ஜா-எல, தண்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.


வேறு ஒருவரால் திருடப்பட்ட தங்க நகைகளை முறைப்பாட்டாளர் கொள்வனவு செய்துள்ளதாகக் கூறி, அந்த சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமலும், நீதிமன்றில் ஆஜர்படுத்தாமலும் இருக்க 300,000 ரூபா பணமும், முக்கால் பவுன் தங்கமும் இலஞ்சமாக கோரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதன் ஒரு பகுதியாக 250,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வேளையில், சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவித்தது.


சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அவரது மகள் இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும், மற்றொரு பிள்ளை பெப்ரவரி மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மேலும், பிணை கோரிக்கை தொடர்பில் உரிய பிரதான நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் தினங்களில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு வருஷவிதான, சந்தேகநபரை ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

00:00

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: கம்பஹா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விளக்கமறியல் இலஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமையக பொலிஸின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை, எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.ஜா-எல, தண்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.வேறு ஒருவரால் திருடப்பட்ட தங்க நகைகளை முறைப்பாட்டாளர் கொள்வனவு செய்துள்ளதாகக் கூறி, அந்த சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமலும், நீதிமன்றில் ஆஜர்படுத்தாமலும் இருக்க 300,000 ரூபா பணமும், முக்கால் பவுன் தங்கமும் இலஞ்சமாக கோரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதன் ஒரு பகுதியாக 250,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வேளையில், சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவித்தது.சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அவரது மகள் இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும், மற்றொரு பிள்ளை பெப்ரவரி மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மேலும், பிணை கோரிக்கை தொடர்பில் உரிய பிரதான நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் தினங்களில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு வருஷவிதான, சந்தேகநபரை ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement