• May 19 2026

கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீர் பரிசோதனை !

Ziya / Dec 20th 2025, 5:39 pm
image

கிளிநொச்சி  போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன்  கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில் குறித்த பரிசோதரன நடைபெற்றது.

குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா? என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

வீதியால் செல்வதற்கு தரமற்ற  வாகனங்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பரந்தன் மற்றும் முருகண்டி வீதி போக்குவரத்தில் ஈடுபடும் குருந்துர சேவையான பஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .

குறித்த  வாகனங்களில் உள்ள குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது

மேலும் பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது

கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீர் பரிசோதனை கிளிநொச்சி  போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன்  கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.கிளிநொச்சி மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில் குறித்த பரிசோதரன நடைபெற்றது.குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.வீதியால் செல்வதற்கு தரமற்ற  வாகனங்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.இதில் பரந்தன் மற்றும் முருகண்டி வீதி போக்குவரத்தில் ஈடுபடும் குருந்துர சேவையான பஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .குறித்த  வாகனங்களில் உள்ள குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுமேலும் பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement