ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (18) காலை 11.00 மணிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இரவு 11.30 மணி வரை அது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊவா, கிழக்கில் ஆபத்து கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் ‘அம்பர்’ எச்சரிக்கை ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.இன்று (18) காலை 11.00 மணிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இரவு 11.30 மணி வரை அது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.