• May 02 2026

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகலில் மழை - இன்றைய வானிலை

Aathira / May 2nd 2026, 7:19 am
image

மத்திய, சப்ரகமுவ, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தென் மாகாண கரையோரப் பகுதிகளிலும், களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் காலை நேரத்திலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிக வெப்பநிலை உணரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்று ஏற்படும் சூழ்நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புத்தளம் முதல் கொழும்பு,காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரை கடல் பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடலில் மணிக்கு 25–35 கி.மீ வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில், மட்டக்களப்பு வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

இதனால் கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகவும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையிலும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகலில் மழை - இன்றைய வானிலை மத்திய, சப்ரகமுவ, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதேபோல் தென் மாகாண கரையோரப் பகுதிகளிலும், களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் காலை நேரத்திலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிக வெப்பநிலை உணரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்று ஏற்படும் சூழ்நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், புத்தளம் முதல் கொழும்பு,காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரை கடல் பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடலில் மணிக்கு 25–35 கி.மீ வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில், மட்டக்களப்பு வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.இதனால் கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகவும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையிலும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement