• May 01 2026

1983 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 402 ஆசிரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வு!

Ziya / May 1st 2026, 12:09 pm
image

1983 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 402 ஆசிரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இம்மாதம் 9 ஆந் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொட்டகலை ஹில்கூல் விருந்தகத்தில் இடம்பெறவுள்ளது.


பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்யும் வகையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மேற்கொண்ட முயற்சியின் பயனாக 1983 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆந் திகதி   402 பேர் ஆசிரிய நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்கள். 


அவர்களில்  பெரும்பாலான மலையக இளைஞர்கள் உட்பட வடக்கு, கிழக்கு மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களும் அடங்கியிருந்ததோடு, பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கே நியமிக்கப்பட்டிருந்தார்கள். 


அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த சேவையால் மலையகத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டதோடு, பல பாடசாலைகள் மூடப்படும் ஆபத்திலிருந்து காப்பற்றப்பட்டிருந்தன.


அவ்வாறு நியமனம் பெற்ற ஆசிரியர்களில் பலர் அதிபர்களாக, ஆசிரிய ஆலோசகர்களாக, கல்விப் பணிப்பாளர்களாக, உதவிக் கல்விப் பணிப்பாளர்களாக, விரிவுரையாளர்களாக பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார்கள். 


இந்த ஆண்டோடு (2026)  தமது  நியமனத்தில் 43 வருட சேவையை நினைவுகூரும் அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்து ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கு கொள்ளவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. 


இதற்கான ஏற்பாடுகளை நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுநிலை கல்வித்துறை சார்ந்தவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். 


மேலதிக விபரங்களுக்கு 071 – 753  7602,   071 – 584  0479 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.

1983 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 402 ஆசிரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வு 1983 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 402 ஆசிரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இம்மாதம் 9 ஆந் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொட்டகலை ஹில்கூல் விருந்தகத்தில் இடம்பெறவுள்ளது.பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்யும் வகையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மேற்கொண்ட முயற்சியின் பயனாக 1983 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆந் திகதி   402 பேர் ஆசிரிய நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்களில்  பெரும்பாலான மலையக இளைஞர்கள் உட்பட வடக்கு, கிழக்கு மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களும் அடங்கியிருந்ததோடு, பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கே நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த சேவையால் மலையகத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டதோடு, பல பாடசாலைகள் மூடப்படும் ஆபத்திலிருந்து காப்பற்றப்பட்டிருந்தன.அவ்வாறு நியமனம் பெற்ற ஆசிரியர்களில் பலர் அதிபர்களாக, ஆசிரிய ஆலோசகர்களாக, கல்விப் பணிப்பாளர்களாக, உதவிக் கல்விப் பணிப்பாளர்களாக, விரிவுரையாளர்களாக பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார்கள். இந்த ஆண்டோடு (2026)  தமது  நியமனத்தில் 43 வருட சேவையை நினைவுகூரும் அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்து ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கு கொள்ளவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதற்கான ஏற்பாடுகளை நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுநிலை கல்வித்துறை சார்ந்தவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு 071 – 753  7602,   071 – 584  0479 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement