• Oct 07 2026

யாழில் சற்றுமுன் நடந்த பயங்கரம் - தாயை பறிகொடுத்த மூன்று பிள்ளைகள்!

Chithra / Oct 6th 2026, 2:54 pm
image


யாழ்ப்பாணம் – மீசாலை புத்தூர் சந்தியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 


இந்த குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சிக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவத்தில் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 37 வயதுடைய வரதன் சோபிதா என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


விபத்தால் உழவு இயந்திரத்தின் அடியில் சிக்கி மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது. 


அதேவேளை அப் பகுதியில் சற்று பதற்றமான நிலையும் ஏற்பட்டது. 


இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் சற்றுமுன் நடந்த பயங்கரம் - தாயை பறிகொடுத்த மூன்று பிள்ளைகள் யாழ்ப்பாணம் – மீசாலை புத்தூர் சந்தியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சிக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 37 வயதுடைய வரதன் சோபிதா என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.விபத்தால் உழவு இயந்திரத்தின் அடியில் சிக்கி மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது. அதேவேளை அப் பகுதியில் சற்று பதற்றமான நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement