• Jul 24 2026

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டின் மீது ஐந்து முறை துப்பாக்கி சூடு

Chithra / Jul 23rd 2026, 12:57 pm
image


அம்பாந்தோட்டை  - பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது இன்று முற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 


குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகின்றது. 


 அவரது வீட்டின் வாயிலை நோக்கி சுமார் ஐந்து முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டின் மீது ஐந்து முறை துப்பாக்கி சூடு அம்பாந்தோட்டை  - பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது இன்று முற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகின்றது.  அவரது வீட்டின் வாயிலை நோக்கி சுமார் ஐந்து முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement