கண்டியில் பழைய சிறைச்சாலைக்கு முன்னால் அமைந்திருந்த நடைபாதை இன்று (29) காலை திடீரென தாழிறங்கி இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நடைபாதையில் பயணித்துக்கொண்டிருந்த மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அருகிலுள்ள கடை ஒன்றின் முன்பாக இருந்த நடைபாதையின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கி இடிந்து விழுந்தது.
நடைபாதை திடீரென இடிந்து விழுந்ததையடுத்து, அதன் கீழ் இருந்த பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடைகளுக்குப் பின்னால் உள்ள கால்வாயிலிருந்து தொடர்ந்து வெளியேறும் நீரோட்டம் காரணமாக, நடைபாதைக்குக் கீழ் இருந்த மண் அரிக்கப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டியில் திடீரென இடிந்து விழுந்த நடைபாதை – 4 பேர் காயம் கண்டியில் பழைய சிறைச்சாலைக்கு முன்னால் அமைந்திருந்த நடைபாதை இன்று (29) காலை திடீரென தாழிறங்கி இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நடைபாதையில் பயணித்துக்கொண்டிருந்த மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அருகிலுள்ள கடை ஒன்றின் முன்பாக இருந்த நடைபாதையின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கி இடிந்து விழுந்தது.நடைபாதை திடீரென இடிந்து விழுந்ததையடுத்து, அதன் கீழ் இருந்த பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.கடைகளுக்குப் பின்னால் உள்ள கால்வாயிலிருந்து தொடர்ந்து வெளியேறும் நீரோட்டம் காரணமாக, நடைபாதைக்குக் கீழ் இருந்த மண் அரிக்கப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.