கிளிநொச்சியில் மின்சாரக்கம்பியின் மீது பனைமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
நாடுமுழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் கனமழையுடன் பலத்த காற்று வீசி வருகின்றது. இந்த நிலையிலேயே பலத்த காற்றால் அந்தப்பகுதியில் இருந்த பனைமரம் ஒன்று மின்சாரக் கம்பி மீது முறிந்து வீழ்ந்துள்ளது.
கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் வீதியின் விவசாய பண்ணைக்கு அருகில் இருந்த பனை மரம் மின்சாரக்கம்பியில் வீழ்ந்து காணப்படுகின்றது.
பனைமரத்தை அகற்றும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக்கொள்ளவை அடைந்துள்ளது.
மேலும் மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் , கல்மடுக்குளம் என்பன வான்பாய ஆரம்பித்துள்ளது.
கிளிநொச்சியில் மின்கம்பியின் மேல் முறிந்து வீழ்ந்த பனைமரம் கிளிநொச்சியில் மின்சாரக்கம்பியின் மீது பனைமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. நாடுமுழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் கனமழையுடன் பலத்த காற்று வீசி வருகின்றது. இந்த நிலையிலேயே பலத்த காற்றால் அந்தப்பகுதியில் இருந்த பனைமரம் ஒன்று மின்சாரக் கம்பி மீது முறிந்து வீழ்ந்துள்ளது. கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் வீதியின் விவசாய பண்ணைக்கு அருகில் இருந்த பனை மரம் மின்சாரக்கம்பியில் வீழ்ந்து காணப்படுகின்றது. பனைமரத்தை அகற்றும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக்கொள்ளவை அடைந்துள்ளது.மேலும் மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் , கல்மடுக்குளம் என்பன வான்பாய ஆரம்பித்துள்ளது.